2000களில் மிரட்டிய வில்லன்களுக்கு டப்பிங் கொடுத்த கௌதம் மேனன்!.. படத்துக்கே அதுதான் மாஸ்!.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களை இயக்குகிறார். வில்லனாக நடிக்கிறார் என்பது தெரியும். ஆனால் டப்பிங்கும் கொடுக்கிறார். யாருக்கு என்றால், தன் படங்களில் வில்லனாக நடிப்பவர்களுக்குத் தான்.
2003ல் வெளியான காக்க காக்க படத்தில் பாண்டியா என்ற கேரக்டரில் வரும் வில்லனுக்கு கௌதம் வாசுதேவ் மேனன் தான் டப்பிங் கொடுத்தார். ஆரம்பத்தில் இந்த வேடத்தில் ஜீவன் தான் நடித்து டப்பிங்கும் பேசியுள்ளார். இதைப் பார்த்த கௌதம் மேனனுக்கு அந்த வாய்ஸ் பிடிக்காமல் தானே குரல் கொடுத்தாராம்.
2006ல் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தில் டேனியல் பாலாஜியின் நண்பராக வருபவர்; சலீம். படத்தில் நடித்த இவருக்குக் குரல் கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன் தான். 2007ல் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் வில்லனாக நடித்தவர் மிலிண்ட் சோமன். இவருக்கு தமிழ் தெரியாது. டப்பிங் கொடுத்தவர் கௌதம் மேனன்.
2010ல் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் திரிஷாவின் அண்ணனாக நடித்தவருக்கு டப்பிங் கொடுத்து அசத்தியவர் கௌதம் மேனன்.
2008ல் வெளியான வாரணம் ஆயிரம் படத்தில் வரும் டைட்டில் கிரெடிட் பாடலைப் பாடியவர் கௌதம் மேனன் தான். அது தான் நீதானே என் பொன்வசந்தம் என்ற பாடல். அதே போல ரத்த சரித்திரம் படத்தின் தமிழ் நேரேட்டர் கௌதம் மேனன்.
புதுப்பேட்டை படத்தை இயக்கியவர் செல்வராகவன். இவரும் டப்பிங் கொடுத்துள்ளார். இந்தப் படத்தில் சோனியா அகர்வாலின் அண்ணன் கேரக்டருக்கு இவர் தான் குரல் கொடுத்தாராம். ஆடுகளம் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கிஷோருக்கு குரல் கொடுத்தவர் சமுத்திரக்கனி. அதே படத்தில் டாப்ஸிக்கு குரல் கொடுத்தவர் ஆண்ட்ரியா. பேட்டைக்காரனக்கு குரல் கொடுத்தவர் ராதாரவி.
இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக் காஷ்யப்பின் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரர் யார் தெரியுமா? இயக்குனர் மகிழ் திருமேனி. நிழல்கள் ரவி கேஜிஎப், பிகில், காப்பான் படங்களில் டப்பிங் கொடுத்துள்ளார். 2.0 படத்தில் வில்லன் அக்ஷய் குமாருக்குக் குரல் கொடுத்தவர் நடிகர் ஜெயப்பிரகாஷ்.