Connect with us
bonda

Cinema News

வடிவேல் காலில் விழுந்தேன்!.. ஆனாலும் விரட்டி அடித்தார்!.. குமுறும் போண்டா மணி…

திரையுலகில் வைகைப்புயலாக நுழைந்து ரசிகர்களை சிரிக்க வைத்து அவர்களின் மனதில் இடம் பிடித்தவர் வடிவேல். ராஜ்கிரன் கதாநாயகனாக நடித்த என் ராசாவின் மனசிலே படத்தில்தான் வடிவேலு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து கிராமத்து கதைகளில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களிடம் பிரபலமானார்.பல படங்களில் நடித்து முன்னணி காமெடி நடிகராகவும் மாறினார். இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தின் படப்பிடிப்பில் இயக்குனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த படத்திலிருந்து விலகினார். அதுவே அவருக்கு ஏழரையாக மாறியது.

Vadivelu

Vadivelu

அதன்பி 4 வருடங்கள் வடிவேல் திரைப்படங்களில் நடிக்கவில்லை. அதன்பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்தார். ஆனால், அந்த படத்தில் அவரின் காமெடி காட்சிகள் ரசிகர்களை சிரிக்கவைக்க வில்லை. ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி 2 படத்திலும் நடித்தார். ஆனால், வடிவேல் கொடுத்த குடைச்சலால் அவரின் காட்சிகள் குறைக்கப்பட்டு விட்டது. திரையில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் வடிவேலு நிஜ வாழ்வில் அவருடன் நடிக்கும் காமெடி நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கதற வைப்பவர். இது பலருக்கும் தெரியாது.

vadivelu

vadivelu

தான் இல்லையேல் தமிழ் சினிமாவே இல்லை என்கிற ரீதீயில் பேசுவார். யாரையும் மதிக்கமாட்டார். அவரோடு நடிக்க விரும்பும் காமெடி நடிகர்கள் அவரின் அலுவலகத்தின் வாசலில் மணிக்கணக்கில் காத்திருப்பார்கள். அவர்கள் நின்று கொண்டே இருக்க வேண்டும். அமர்ந்தால் அவர்களுக்கு அன்று வாய்ப்பு கிடையாது. இப்படி சைக்கோ போல நடந்துகொள்வார் வடிவேலு. இதை பல நடிகர்கள் தற்போது கூறி வருகின்றனர்.

bonda

bonda

இந்நிலையில், வடிவேல் நடித்த பல காமெடி காட்சிகளில் அவருடன் நடித்த போண்டாமணி சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘வடிவேலுவுக்கும், சிங்கமுத்துவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிந்த போது ஒரு யுடியூப்பில் பேட்டி கொடுத்த நான் அவர்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும். அதுதான் என் ஆசை’ என சொல்லிவிட்டேன்.

அன்று இரவு 2 மணிக்கு வடிவேல் எனக்கு போன் செய்து அசிங்கம் அசிங்கமாக திட்டினார். அடுத்தநாள் காலை அவரின் அலுவலகம் சென்று அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டேன். ஆனாலும் என்னை விரட்டி அடித்தார். அதன்பின் என்னை அவருடன் நடிக்க வைக்கவே இல்லை. நான் உடல் நிலை பாதிக்கப்பட்டு உதவி கேட்டபோது போண்டா மணிக்கு உதவி செய்வேன் என செய்தியாளர்களிடம் சொன்னார். ஆனால், இதுவரை ஒரு ரூபாய் எனக்கு கொடுக்கவில்லை’ என அவர் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் நாகரீக மனிதர்தானா? கோபத்தில் கொந்தளித்த எஸ்.பி.பி… அப்படி என்ன நடந்தது?

google news
Continue Reading

More in Cinema News

To Top