Connect with us
bonda

Cinema News

தாலி கட்டும் நேரத்தில் விரைந்த போலீஸார்! அந்த நடிகர் கொடுத்த புகார் – அதிரிபுதிரியாக நடந்த போண்டாமணி திருமணம்

Actor Bondamani: தமிழ் சினிமாவில் வடிவேலுவுடன் சேர்ந்து பல ஹிட் காமெடிகளை கொடுத்த நடிகராக போண்டா மணி இருந்தார்.ஏகப்பட்ட படங்களில்  நடித்த போண்டாமணி தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

சிலோன் இருந்து வந்து மிகவும் கஷ்டப்பட்டுத்தான் இந்த சினிமாவிற்குள் வந்தார்.கிட்டத்தட்ட ஒன்றடை வருட காலமாகவே அவருடைய உடல் நிலை சரியில்லாமல் மிகவும் இக்கட்டான நிலையில் தான் இருந்தார். தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து டையாலிஸ் செய்தும் வந்தார்.

இதையும் படிங்க: வார்னிங் கொடுத்த சிவாஜி… கோபப்பட்ட இயக்குனர்.. கடைசில தோல்வியை சந்திச்சதுதான் மிச்சம்…

இந்த நிலையில் நேற்று திடீரென வீட்டிலேயே மயக்கமடைய மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டடதாக கூறினர். இன்று திரையுலகை சார்ந்த பிரபலங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்தவண்ணம் இருக்கின்றனர்.

இந்த நிலையில் அஞ்சலி செலுத்த வந்த சிங்க முத்து போண்டாமணி பற்றி சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். அவருக்கு திருமணம் செய்யக் கூட காசு இல்லாமல் இருந்தாராம். சக நடிகர்கள்தான் பெண் பார்த்து அவர் திருமணத்தை நடத்தி வைத்தார்களாம்.

இதையும் படிங்க: ஓடாதுனு நினைச்ச இயக்குனர்.. நடிப்பால் ஓடவைத்த சிவாஜி கணேசன்… அட அந்த படமா?!..

அதுமட்டுமில்லாமல் ஒரு சக நடிகர் ஒருவர் விடுதலை புலியில் இருந்து பெண் பார்த்து திருமணம் செய்கிறார் என அவர் மீது போலீஸில் புகார் கொடுத்தாராம். அதனால் அவரை கைது செய்ய திருமண மண்டபத்திற்கே வந்து விட்டார்களாம்.

அங்கு இருந்தவர்கள் அதன் பிறகு சொல்லி திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள். இருந்தாலும் அவர் மீது நிறைய புகார்கள் இருந்ததாகவும் அதை எல்லாம் சமாளித்துதான் சினிமாவில் அவரால் சாதிக்க முடிந்தது என்றும் சிங்க முத்து கூறினார்.

இதையும் படிங்க: சன்டே சலார் சரவெடி!.. 3 நாளில் டோலிவுட்டில் இண்டஸ்ட்ரி ஹிட்.. ஜவான் வசூலுக்கே ஆப்பு கன்ஃபார்ம் போல!..

google news
Continue Reading

More in Cinema News

To Top