Connect with us

Cinema News

சன்டே சலார் சரவெடி!.. 3 நாளில் டோலிவுட்டில் இண்டஸ்ட்ரி ஹிட்.. ஜவான் வசூலுக்கே ஆப்பு கன்ஃபார்ம் போல!..

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரபாஸின் சலார் திரைப்படம் முதல் நாளில் 175 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சனிக்கிழமை வசூல் பெரிய அளவில் குறைந்து விட்டது என கூறப்பட்ட நிலையில், 120 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி ஒட்டுமொத்தமாக 2 நாட்களில் 295.5 கோடி ரூபாயை பிரபாஸின் சலார் வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீண்டும் மக்கள் கூட்டம் தியேட்டரை நோக்கி நகர்ந்த நிலையில், 3 நாட்களில் அதிகபட்சமாக 420 கோடி ரூபாய் வசூலை இதுவரை சலார் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மாலை படக்குழு ஞாயிறு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடுவார்கள்.

இதையும் படிங்க: அர்த்தமாயிந்தா ராஜா!.. விஜய் ஃபேன் தியேட்டர்லையே இப்படி கீழ இறக்கி உட்கார வச்சிட்டாரே சூப்பர்ஸ்டார்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கேஜிஎஃப், கேஜிஎஃப் 2 படங்களின் வசூலை சலார் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் தான் அதிக வசூல் ஈட்டிய படமாக உள்ள நிலையில், அந்த படத்தின் வசூலையும் ஜவான் முறியடித்து இந்த ஆண்டின் ஆல் டைம் பிளாக்பஸ்டர் திரைப்படமாக மாறும் என்றே தெரிகிறது.

ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம் அனைத்து நெகட்டிவ் விமர்சனங்களையும் கடந்து 1000 கோடி வசூலை தட்டித் தூக்கி உள்ளது. அதே போல சலார் படமும் நெகட்டிவ் விமர்சனங்களை எல்லாம் கண்டுக் கொள்ளாமல் வசூல் வேட்டையில் வெற்றி நடை போட்டு வருகிறது.  இரண்டு படங்களும் ஏ சான்றிதழ் பெற்ற படங்கள் என்பது தனிக்கதை.

இதையும் படிங்க: காலையில தான் லவ்வர்ன்னு அறிமுகப்படுத்திட்டு!.. இப்போ அசிங்க அசிங்கமா திட்டுறாரே மணிகண்டன்!..

சலார் படத்தின் வெற்றியை உணர்ந்த பிரபாஸ் கல்கி மற்றும் மாருதியை முடித்து விட்டு உடனடியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்த பாகத்திலும் நடிக்க திட்டமிட்டு வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top