Connect with us
chandrababu mgr

Cinema History

ஓ மை டார்லிங்!.. எம்.ஜி.ஆரை கலாய்த்த சந்திரபாபு!.. ஆனாலும் இவ்வளவு குசும்பு ஆகாது!..

Mgr Chandrababu: சந்திரபாபு தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவர். இவரை நாம் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினிகணேசன் போன்ற நடிகர்களுடன் பல திரைப்படங்களில் காணலாம். இவரின் ஒல்லியான தோற்றம், காமெடியான நடிப்பினால் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொண்டார். மேலும் இவர் சென்னை பாஷை பேசுவதில் கில்லாடி. இதுவும் இவர் பிரபலமடைய ஒரு காரணம்.

இவர் தமிழில் தன அமராவதி திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். பின் பதிபக்தி, பாரத விலாஸ், அன்னை போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் சிறப்பாக நடனம் ஆடக்கூடியவர். இவரின் காமெடிகளும் அனைவரும் ரசிக்கும் வகையில் இருக்கும். ஆனால் என்னதான் சினிமாவில் மற்றவர்களை சிரிக்க வைத்தாலும் நிஜ வாழ்வில் இவர் பல கஷ்டங்களையும் அனுபவித்துள்ளார். இவரது வாழ்வில் திருமணம் என்பது இவருக்கு சரியாக அமையவில்லை.

இதையும் வாசிங்க:லிங்குசாமியை கதறவச்ச அந்த ஒரு திரைப்படம்… ஒடஞ்சு போன மனுஷன் என்ன செஞ்சாரு தெரியுமா?…

தனது மனைவி வேறு ஒருவரை காதலிப்பது தெரிந்து இவரே அவரை அவர் காதலுடன் சேர்த்து வைத்துள்ளார். பின் குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் ஒரு கட்டத்தில் இறந்தும்போய்விட்டார். இவர் பொதுவாக தான் இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்து கொள்வாராம். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் இவருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே நடந்துள்ளது.

எம்ஜிஆர் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் புதுமைபித்தன். இப்படத்தினை இயக்குனர் டி.ஆர்.ராமையா இயக்கினார். இப்படத்தில் டி.ஆர்.ராஜகுமாரி, பாலையா, சந்திரபாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படத்தின் படபிடிப்பின்போது எம்ஜிஆர் வாகினி ஸ்டுடியோவில் மேக்கப் போட்டு கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு சென்ற சந்திரபாபு அறையின் கதவை தட்டியிருக்கிறார்.

இதையும் வாசிங்க:ஆசையாக துவங்கிய படம்!. எம்.ஜி.ஆர் மீது வந்த கோபம்!.. கண்ணதாசன் செஞ்ச வேலைய பாருங்க…

எம்ஜிஆரோ பெண் வேடம் போட்டு கொண்டிருந்தாராம். எங்கு சந்திரபாபு தன்னை பார்த்துவிட்டால் கிண்டல் அடிப்பாரோ எனும் எண்ணத்தில் அறையின் உள்ளே இருந்து ஆண்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என கூறியுள்ளார். அதனை புரிந்து கொண்ட சந்திரபாபு ஓ மை டார்லிங்.. என்று கிண்டல் செய்துள்ளார்.

அப்போது அங்கு வந்த இயக்குனர் அவரை தொந்தரவு செய்யாதீர்கள். இப்போது படபிடிப்பினை தொடங்க வேண்டும். அப்புறமாக அவரை கிண்டல் செய்யலாம் என கூறியுள்ளார். ஆனால் சந்திரபாபு இயக்குனரின் பேச்சை கேட்காமல் எம்ஜிஆரை கிண்டல் செய்து கொண்டே இருந்தாராம். பின்னர் படக்குழுவினர் எம்ஜிஆரை விரைவாக அழைத்து சென்றுவிட்டனராம். இவ்வாறு தான் இருக்கும் இடத்தை எப்போதுமே கலகலப்பாக வைத்து கொள்வாரம் சந்திரபாபு.

இதையும் வாசிங்க:மது – மாது.. தடம்புரண்ட சுதாகரின் வாழ்க்கை!.. கனவு நாயகன் கோமாளி ஆன கதை!..

google news
Continue Reading

More in Cinema History

To Top