Connect with us
cho

Cinema History

எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…

Kanandhasan: தமிழ் சினிமாவில் தனது பாடல்களின் மூலம் மக்களை கட்டி போட்டவர் கவிஞர் கண்ணதாசன். இவர் பல திரைப்படங்களுக்கு பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். இவரின் பாடல்களில் ஒரு நயம் இருக்கும். பாமர மக்களுக்கும் எளிதில் புரியும் வகையில் இவரது பாடல்கள் அமைந்தன.

அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் இவரின் பாடல்களை ரசிக்காதவர்கள் என இருக்கவே முடியாது. இவர் வேட்டைகாரன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம் போன்ற பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். இவர்ர் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தினால் அரசியலிலும் நுழைந்தார். திராவிட முன்னேற்ற கழகத்தில் முக்கிய பொறுப்பேற்றார்.

இதையும் வாசிங்க:எம்ஜிஆரை கிண்டலடித்த சிவாஜி.. பதிலுக்கு புரட்சித்தலைவர் என்ன செய்தார் தெரியுமா?

இவருக்கும் நடிகர் மற்றும் அரசியல் விமர்சகரான சோ ராமசாமிக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. சோ பொதுவாக எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அவர்களை விமர்சிப்பது வழக்கம். ஒரு நாள் கண்ணதாசன் சோவிற்கு போன் செய்து இன்று மதியம் திராவிட கழகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிடப்போகிறார்கள் என கூறியுள்ளார்.

சோ பத்திரிக்கையாளர் என்பதால் அது என்ன செய்தி என அவரை கேட்டுள்ளார். தொடர்ந்து கேட்டு கொண்டே இருந்ததால் சோவிடம் கண்ணதாசன் திராவிட கழகத்திலிருந்து எம்ஜிஆரை நீக்க போகின்றனர் என கூறியுள்ளார். மேலும் இனி எம்ஜிஆரால் எதுவுமே செய்ய முடியாது என கேலி பேசியுள்ளார். பின் மதியமே அந்த செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

இதையும் வாசிங்க:மொத்த பேரும் முட்டாளுங்க!.. படம் எடுத்து வீணாப்போனேன்!. புலம்பும் கஞ்சா கருப்பு..

அப்போது சோ கண்ணதாசனிடம் எம்ஜிஆரை கட்சியிலிருந்து விலக்கி கருணாநிதி பெரிய தவறு செய்கிறார் எனவும் இதனால் அவருக்கு நஷ்டம் ஏற்படப்போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் கண்ணதாசனோ அப்படி நடக்காது என ஆணித்தரமாக கூற சோ அவரிடம் சரியாக ஒரு மாதம் கழித்து ‘ஆமாம் சோ நீ சொன்னது உண்மைதான் என நீங்கள் என்னிடம் கூறுவீர்கள்’ என கூறிவிட்டு போனை வைத்து விட்டாராம்.

அதைபோல் சரியாக ஒரு மாதம் கழித்து சோவிற்கு கண்ணதாசன் போன் செய்து ‘எம்ஜிஆரை கட்சியிலிருந்து நீக்கி கருணாநிதி தவறு செய்துவிட்டார்… நீங்கள் சொன்னது சரிதான்’ என கூறி மன்னிப்பும் கேட்டாராம். என்னதான் தான் பெரிய கவிஞராய் இருந்தாலும் தன் மேல் தவறு இருக்கும் பட்சத்தில் தானாகவே போன் செய்து சோவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் கவிஞர். இது அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.

இதையும் வாசிங்க:என் கணவருக்கே நான்தான் பொண்ணு பார்த்தேன்… நடிகை கொடுத்த அதிர்ச்சி

google news
Continue Reading

More in Cinema History

To Top