Connect with us
Viji Chandrasekar

Cinema History

என் கணவருக்கே நான்தான் பொண்ணு பார்த்தேன்… நடிகை கொடுத்த அதிர்ச்சி

இயக்குனர் கே.பாலசந்தரின் அறிமுகம் நடிகை விஜி சந்திரசேகர். அதன் பிறகு பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோரின் படங்களிலும் நடித்தார். ஆரோகனம், மதயானைக்கூட்டம், வெற்றிவேல் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் நடித்தவர். ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, சூர்யா, கார்த்தி, தனுஷ், விஜயசேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் விஜி.

இதையும் படிங்க: புருஷனை வெறுப்பேற்ற கிளாமர் ரூட்டுக்கு மாறிய பிரபல நடிகை!.. எல்லாம் அந்த படம் பண்ண வேலை தானாம்!..

நடிக்கறதுல சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்லை. எனக்கு படிப்புல தான் பயங்கர ஆர்வம். வீணை கத்துக்கறது தான் ரொம்ப ஆர்வம். எதேச்சையா அமைந்தது தான் நடிப்பு. தில்லு முல்லு படத்துல தான் அறிமுகம். அந்தப்படம் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சிருச்சி. பெங்களூர்ல சட்டம் படிச்சேன் என்று தனது ஆரம்ப கால நினைவுகளைப் பகிர்கிறார்.

காதல் திருமணமா என்று கேட்டால் இல்ல.. அக்கா பார்த்து வச்ச திருமணம். ரொம்ப தெரிஞ்சவங்க. 8 வருஷ பழக்கம். முதல்ல எங்க வீட்டுக்காரருக்கு நானே பெண் பார்த்துக்கிட்டு இருந்தேன். இன்னாருக்கு இன்னாரென்று யார் யாருக்கு எங்கே எழுதி வச்சிருக்கோ அங்க தான் நடக்கும் போல என்கிறார் விஜி.

இதையும் படிங்க: வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்!.. கண்டுக்கொள்ளாமல் ஷூட்டிங் போகும் பெரிய நடிகர்கள்.. ஹரிஷ் கல்யாண் பளிச்!

வடிவேலு அப்ப தான் வளர்ந்து வரும் நேரம். காமெடியா நடிக்கிறது ரொம்ப கஷ்டம். என்னைப் பொருத்த வரை பிடிக்காததை செய்யக்கூடாது. முதல் மரியாதை ராதா கெட்டப்னு சொன்னாரு பாரதி ராஜா. எனக்கு ராதா கெட்டப், முதல் மரியாதைன்ன உடனே பூங்காத்து திரும்புமா ஞாபகம் வந்துட்டுது. வத்தலகுண்டுல சூட்டிங்.

நான் அப்படியே கிளம்பிடலாமான்னு நினைச்சேன். அவரோட படம் என்றதால் அந்தப் படத்துல நடிச்சேன் என்கிறார் விஜி. அதுதான் கிழக்குச் சீமையிலே. எங்கயாவது பார்த்தா நான் எப்படி அந்தக் காமெடி ரோல எனக்குக் கொடுத்தீங்கன்னு பாரதிராஜாவோட சண்டை போடுவாராம்.

தொடர்ந்து 100 படங்களுக்கு மேல வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் மறுத்துவிட்டாராம். பந்தம், ரேவதி, ஜாதிமல்லி, குடும்பம் ஒரு கோயில், அலைகள், அண்ணாமலை, கோலங்கள், பெண், அழகி, சந்திரகுமாரி ஆகிய டிவி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நானே ராஜா நானே மந்திரி… வொர்க் அவுட் ஆகுமா இந்த மேஜிக்.. விஜய் சேதுபதி படத்தில் நடந்த ட்விஸ்ட்..!

google news
Continue Reading

More in Cinema History

To Top