More
Categories: Cinema History Cinema News latest news

யுவன் இல்லனா எங்க குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும்!.. மனம் உருகி பேசிய தனுஷ்!..

தமிழில் கிராமம் சார்ந்த திரைப்படங்களை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. இவரின் மூத்த மகன் செல்வராகவன். இளைய மகன் தனுஷ். சொந்த படம் எடுத்து நஷ்டமாகி கடனாளியாகி சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு குடும்பத்திற்கு சென்றுவிட திட்டமிட்டார் கஸ்தூரி ராஜா. ஆனால், எனக்கு 50 லட்சம் மட்டும் கொடுங்கள். நான் ஒரு படம் எடுக்கிறேன் என செல்வராகவன் கூற அப்படி உருவான திரைப்படம்தான் துள்ளுவதோ இளமை. பல இடங்களில் கடன் வாங்கித்தான் அந்த படத்தை எடுத்தார் கஸ்தூரிராஜா.

Advertising
Advertising

அந்த படம் அவரே எதிர்பார்க்காத வகையில் பெரிய ஹிட் அடித்தது. வாலிப பசங்களை கெடுக்கும் வகையில் பல காட்சிகள் அப்படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும், அப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பலரும் கூறினார். ஆனாலும், ரசிகர்கள் இப்படத்தை ஓட வைத்தனர். பிரபு என்கிற நிஜப்பெயரை மாற்றி தனுஷ் என்கிற பெயரில் இப்படத்தில் அறிமுகமானார் தனுஷ்.

kadhal konden

துள்ளுவதோ இளமைக்கு பின் மீண்டும் தனுஷை வைத்து ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார் செல்வராகவன். அப்படமும் சூப்பர் ஹிட். அதேபோல், புதுப்பேட்டை படமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த மூன்று படங்களுக்குமே இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இந்த மூன்று படங்களிலும் அவரின் பாடல்கள் அவ்வளவு சிறப்பாக இருக்கும். இந்த படங்களின் பாடல்கள்தான் யுவனுக்கு ரசிகர்களை பெற்றுக்கொடுத்தது.

danush

இந்நிலையில், ஒரு விழாவில் பேசிய தனுஷ் ‘யுவன் சங்கர் ராஜா இல்லையேல் எங்கள் குடும்பம் நடுத்தெருவில் நின்றிருக்கும். ஏனெனில், மிகவும் கஷ்டமான சூழ்நிலையில்தான் துள்ளுவதோ இளமை படத்தை எடுத்தோம். அப்படத்தில் மனதை மயக்கும் பாடல்களை யுவன் கொடுத்தார். அந்த படம் வெற்றியடைய அவரின் பாடல்களே பெரும் உதவியாக இருந்தது’ என மனம் உருகி பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விடிய விடிய பார்த்திபனை தூங்கவிடாமல் செய்த நடிகர்!.. ஒரு வசனத்துக்கு இவ்வளவு அக்கப்போரா?!..

Published by
சிவா

Recent Posts