Connect with us
vijay

Cinema News

அடுத்த படத்துக்கு புளியங்கொம்பா புடிச்ச விஜய்!.. சம்பளத்துல 50 கோடி ஏத்திட்டாரா?!…

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக மாறியிருப்பவர் விஜய். சில வருடங்களுக்கு முன்பு ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்த விஜய் இப்போது அவருக்கு சமமான நடிகராக மாறிவிட்டார். இன்னும் சொல்லப்போனால் ரஜினியை விட பல கோடிகள் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியிருக்கிறார்.

விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படம் சில நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் குறை வைக்கவில்லை. அதனால்தான் விஜயின் சம்பளம் படத்துக்கு படம் ஏறிக்கொண்டே போகிறது.

இதையும் படிங்க: எங்க திரும்பினாலும் கேமியோவா? கமல் படத்தில் களமிறங்கும் மல்லுவுட் ஸ்டார்…

விஜய் இப்போது 200 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. கோட் படத்துக்கும் கிட்டத்தட்ட இந்த சம்பளம்தான். விஜயை வைத்து படமெடுத்து, சிக்கல் இன்றி படத்தை ரிலீஸ் செய்ய வேண்டுமானால் பணத்துக்கு பிரச்சனை இல்லாத தயாரிப்பாளர் வேண்டும். இதை விஜய் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

ஏனெனில், லைக்கா தயாரிப்பில் அஜித் நடித்து துவங்கப்பட்ட விடாமுயற்சி படம் பாதி எடுக்கப்பட்ட நிலையில் பணம் இல்லாமல் முடங்கி கிடக்கிறது. இதையெல்லாம் யோசித்த விஜய் தனது அடுத்த படத்திற்கு பணத்துக்கு பிரச்சனை இல்லாத ஒரு தயாரிப்பாளரை தேடிவந்தார். இப்போது அவர் கிடைத்துவிட்டார்.

இதையும் படிங்க: லியோவை மிஞ்சிய தக் லைஃப்!.. வெளிநாட்டு உரிமை இத்தனை கோடியா?.. 1000 கோடி வசூல் பண்ணுமா?!..

பிரபல பிரிஸ்டீஜ் நிறுவனம் கேபிஎன் புரடெக்‌ஷன்ஸ் என்கிற பெயரில் விஜயின் 69வது படத்தை தயாரிக்க போகிறார்கள் என சொல்லப்படுகிறது. பிரிஸ்டீஜ் நிறுவனம் மிகப்பெரிய நிறுவனம். விஜய் இந்த நிறுவனத்துக்கு கொக்கி போட்டிருப்பதை பார்க்கும்போது விஜய் தனது சம்பளத்தில் மேலும் 50 கோடியை ஏத்திவிட்டாரா என யோசிக்க வைக்கிறது.

இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குவது கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. கமலை நம்பி ஒரு வருஷத்திற்கும் மேல் காத்திருந்து வெறுத்துபோன ஹெச்.வினோத் விஜயிடம் கதை சொல்லி சம்மதம் வாங்கி இருக்கிறார். விரைவில் இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top