அவர் சகவாசமே வேணாம்.. ஒரு போட்டோ எடுக்க ஆசைப்பட்டது தப்பா? நடிகரை அவமானப்படுத்திய அஜித்..

by Rohini |
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு ஸ்டைலிஷான நடிகராக அஜித் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக அவர் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அவருக்கு என்று தனி ஸ்டைல், தனி வழி என அவருடயை வாழ்க்கையை அவர் விருப்பப்படி வாழ்ந்து வருகிறார். எந்தவொரு விமர்சனம் வந்தாலும் அதை பற்றி எதையும் கவலை கொள்வதில்லை அஜித்.

தற்போது அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி போன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறார். இருந்தாலும் அந்தப் பட அறிவிப்பு வெளியான பிறகு அஜித் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

இதையும் படிங்க: தலைவர்171 திரைப்படத்தை தயாரிக்க இருந்தது இந்த நடிகரா? அட மிஸ் பண்ணிட்டாரே!…

இதை பார்த்த ரசிகர்கள் குட் பேட் அக்லி பொங்கல் ரிலீஸ் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால் தல எப்பவும் போல ஊர் சுற்ற கிளம்பி விட்டாரே என்று தங்களது கமெண்டில் கூறி வருகிறார்கள். இதற்கிடையில் விடாமுயற்சி படத்தின் நிலைமை என்ன என்பது யாருக்கும் தெரியவில்லை.

இந்த நிலையில் பிரபல காமெட் நடிகர் டெலிபோன் ராஜ் அஜித்தை பற்றி ஒரு தகவலை கூறினார். அதாவது அஜித்துடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கவேண்டும் என டெலிபோன் ராஜ் விரும்பினாராம். அப்போது அஜித், ரோஜா நடித்த உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். டெலிபோன் ராஜ் ஆசையை ரோஜாவும் ரமேஷ் கண்ணாவும் நிறைவேற்ற அவரை நேராக அஜித்திடம் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

tele

tele

இதையும் படிங்க: விஜயகாந்த் நடித்து பீதியை கிளப்பிய திரில்லர் படங்கள்!.. மறக்க முடியாத ஊமை விழிகள்!…

ஆனால் அஜித் போட்டோ எடுக்க மாட்டேன் என்று சொல்லி எழுந்து சென்று விட்டாராம். இதை பார்த்ததும் டெலிபோன் ராஜுக்கு ஒரே மனக் கஷ்டமாக இருந்ததாம். இதனால் மீண்டும் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு டெலிபோன் ராஜுக்கு வர அந்தப் படமே வேண்டாம் என ஒதுங்கிவிட்டாராம். ஒரு போட்டோ கூட எடுக்க விருப்பமில்லாமல் போய்விட்டார் அஜித். அஹிலிருந்தே அஜித் மீது எனக்கு ஒரு நல்ல எண்ணமே போய்விட்டது என டெலிபோன் ராஜ் கூறினார்.

Next Story