அவர போய் பாத்தான்.. இன்னிக்கு என் மகன் நல்லா இருக்கான்! பிரபல மூத்த நடிகரை நெகிழ வைத்த அஜித்

by Rohini |
thaala
X

thaala

Actor Ajith: ஒரு மனிதரை மேலோட்டமாக பார்த்து அவர் அப்படித்தான் இவர் இப்படித்தான் என சொல்வது மிகவும் தவறு. அவரிடம் நெருங்கி பழகும் நபருக்குத்தான் தெரியும் அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்று. அந்த வகையில் சமீபகாலமாக அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

அனைவரிடமும் ஒதுங்கியே இருக்கிறாரே? பிற்காலத்தில் இவருக்கு என யார் வருவார்? ஒரு வேற்றுக்கிரகவாசியாகவே மாறிவிட்டாரே அஜித் என கடுமையாக அவரை பற்றி விமர்சித்து வருகிறார்கள். ஆனால் அவரிடம் நெருங்கி பழகிய நண்பர்கள், டெக்னீசியன்கள், நடிகர்கள் என பெரும்பாலும் அவரின் நல்ல எண்ணத்தை பற்றி பல பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: கண்ணதாசனுக்கு பாடம் புகட்டிய பார்வை இல்லாத சிறுமி!.. அங்கிருந்து துவங்கியதுதான் எல்லாமே!..

அந்த வகையில் பிரபல மூத்த நடிகரான டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி பல சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார். ஒரு படத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருந்த சமயம். அப்போது ஸ்கிரிப்ட் பேப்பரை படித்துக் கொண்டிடுருந்தாராம் அஜித். அவர் எதிரில் டெல்லி கணேஷ் போய் நிற்க அவரை பார்த்ததும் அஜித் ‘சார் நீங்களா?’ என கட்டிபிடித்து அணைத்துக் கொண்டாராம்.

கேரவனிலும் போய் உட்காரமாட்டாராம். தரையில் பல பேர் உட்கார்ந்திருக்க அவர்களுடன்தான் சேர்ந்து உட்காருவாராம். தனியாகவும் இருக்கமாட்டாராம். ஒரு சமயம் டெல்லி கணேஷ் தன் மகனுடைய புகைப்படத்தை காட்டி சினிமாவில் வர இருக்கிறான் என சொல்ல அவர் மகனை பார்த்ததும் அஜித் ‘அவர் கண் நன்றாக இருக்கிறது, உங்கள் மகனை பார்க்க வேண்டுமே’ என கூறினாராம்.

delhi

delhi

இதையும் படிங்க: ராமராஜன் நடித்து வெளிவராத படங்கள் இவ்ளோ இருக்கா?.. இதுதான் காரணமா?!..

உடனே டெல்லி கணேஷ் தன் மகனிடம் விஷயத்தை சொல்லி வரவழைக்க அஜித்துடன் டெல்லி கணேஷின் மகன் இரண்டு நாள்கள் தங்கியிருந்தாராம். அதுமட்டுமில்லாமல் வழக்கம் போல டெல்லி கணேஷின் மகனுக்கு அறிவுரைகளையும் வழங்கி ஒன்றும் கவலை வேண்டாம். பார்த்துக் கொள்ளலாம் என கூறியிருக்கிறார். அஜித்தை பார்த்துவிட்டு வந்ததில் இருந்து தன் மகனுக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. படங்களில் நடித்துக் கொண்டும் இருக்கிறார். அஜித்திடம் ஒரு பாஸிட்டிவான எனர்ஜி இருக்கிறது என டெல்லி கணேஷ் கூறினார்.

Next Story