ராமராஜன் நடித்து வெளிவராத படங்கள் இவ்ளோ இருக்கா?.. இதுதான் காரணமா?!..

by sankaran v |
Ramarajan
X

Ramarajan

மக்கள் நாயகன் என்று தமிழ்த்திரையுலகில் போற்றப்படுபவர் ராமராஜன். இவர் நடிப்பில் பல படங்கள் மெகா ஹிட்டாகியுள்ளன. 80 மற்றும் 90களில் இவர் நடித்த பல படங்கள் வெளியானது. அவர் நடித்துப் பல படங்கள் வெளியாகாமலும் போனது. என்னடா இந்தப் படம் ஏன் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் கேட்கக்கூட மறந்து போனார்கள். சூட்டிங் ஆரம்பித்து பாதியில் நின்று போன படங்களும் உண்டு. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா...

வேலா, காவலன், தங்கநிலா, தர்மன் (இரட்டை வேடம்), ராமர் படை, வள்ளல் மகன், பெத்தவ மனசு, சத்திய தாய், மதுரை தங்கம், கும்பாபிஷேகம், நீ ஒரு தனி பிறவி, காங்கேயன் காளை, கண்ணுபட போகுது, பல்லவன் பாண்டியன் (இரட்டை வேடம்), தம்பிக்கு தாய் மனசு, நான் உங்கள் பக்கம், நம்ம ஊர் சோழவந்தான், கூவுங்கள் சேவல்களே, மண்ணுக்கேத்த மைந்தன்.

இவற்றில் மதுர தங்கம், கும்பாபிஷேகம் போன்ற படங்கள் அறிவித்ததுமே நின்று போய்விட்டன. அதே நேரத்தில் தர்மன், வேலா, காவலன், தம்பிக்கு தாய் மனசு, மண்ணின் மைந்தன் ஆகிய படங்கள் சூட்டிங் ஆரம்பித்து சிறிது நாள்கள் கழித்து நின்று போய் விட்டன. காவலன் படத்தில் வைக்கிறேன்னு வைக்கிறேன்னு சொல்லிக்கிட்டு வைக்காமத்தான் போனீங்களேன்னு ஒரு பாடல் வெளியானது. இந்தப் பாடல் இரட்டை அர்த்தத்துடன் வெளியானது.

Ramarajan

Ramarajan

அப்போது இளம் ரசிகர்கள் மத்தியில் பாடல் ரொம்ப டிரெண்டிங்கில் இருந்தது. என்ன காரணம் என்று தெரியவில்லை. படம் வெளியாகவில்லை. இந்தப் படம் 90ல் வெளியாவதாக இருந்தது. ராமராஜன் மிடுக்காக போலீஸ் வேடத்தில் நடித்து இருந்தார். படத்தை கண்ணன் இயக்குவதாக இருந்தது. ஜி.கே.முருகேசன் தயாரிப்பில், ராஜேஷ் கன்னா இசை அமைத்தார்.

இந்தப் பாடலை பாடியவர் டி.கே.எஸ்.நடராஜன். அதே போல மண்ணுக்கேத்த மைந்தன் படத்திலும் பாடல்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. படத்தில் மொத்தம் 8 பாடல்கள். இப்போதும் யூடியூப்பில் கேட்கலாம். இருந்தாலும் படம் ஏனோ வரவில்லை. இந்தப்படத்தில் ஜோடியாக குஷ்பு நடித்தார். தீனதயாளன் இயக்கத்தில் தேவா இசை அமைத்தார். ஆனால் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

Next Story