சீரியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய சீரியலாக அமைந்தது மெட்டி ஒலி சீரியல். 2002 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிப்பரப்பான இந்த மெட்டி ஒலி சீரியல் 800 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடிய சீரியலாக கருதப்பட்டது. ஐந்து மகள்களையும் கட்டிக் கொடுத்த புகுந்த வீட்டில் அந்த மகள்கள் படும் கஷ்டத்தை பார்க்க முடியாத அப்பாவின் கதையை மையப்படுத்தி தான் இந்த சீரியல் எடுக்கப்பட்டிருக்கும்.
திருமுருகன் இயக்கத்தில் அமைந்த இந்த மெட்டி ஒலி சீரியலில் தந்தை கதாபாத்திரத்தில் அனைவரையும் கண்கலங்க வைத்திருப்பார் நடிகர் டெல்லி குமார். இவர் நடிகர் அரவிந்த்சாமியின் தந்தையும் கூட. சிறுவயதிலேயே அரவிந்த்சாமியை தனது சொந்த அக்காவிற்கே தத்துக் கொடுத்து விட்டாராம் டெல்லி குமார்.
இதையும் படிங்க : ரஜினிக்கு கொடுத்த BMW காரை விடுங்க!.. மாவீரன் நடிகை சொந்தமா உழைச்சு வாங்குன காரை பாருங்க!..
அவ்வப்போது டெல்லி குமாரை பார்ப்பதற்கு அரவிந்த்சாமி வீட்டிற்கு வருவாராம். எதாவது விழா நாள்களிலும் டெல்லி குமாரை சந்தித்து விட்டு செல்வாராம். இருவரும் சேர்ந்து ஏன் படம் நடிக்கவில்லை என்று கேட்டதற்கு வாய்ப்புகள் அந்த மாதிரி அமையவில்லை. வந்தால் நடிப்போம் என்று டெல்லி குமார் கூறினார்.
சினிமாவில் மிகவும் நெருக்கமான நண்பராக இருப்பது ரஜினி மட்டுமே என்று டெல்லி குமார் கூறினார். ஆரம்பத்தில் சினிமா படங்களில் நடித்த டெல்லி குமார் 1977 ஆம் ஆண்டில் ரஜினியுடன் முதன் முறையாக காயத்ரி என்ற படத்தில் நடித்தாராம். அந்தப் படத்தில் ஸ்ரீதேவிக்கு அப்பாவாகவும் ரஜினிக்கு மாமனாராகவும் நடித்தாராம்.
இதையும் படிங்க : அடக்க ஒடுக்கம்லாம் சீரியல்ல மட்டும்தான்!.. கப்பு வச்சி மறச்சி அதிரவிட்ட காவ்யா….
அதன் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டாராம். 1977 ஆம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் எந்திரன் படத்தில் தான் டெல்லி குமார் ரஜினிக்கு அப்பாவாக நடித்தார். அந்தப் படப்பிடிப்பு சமயத்தில் கூட ஐஸ்வர்யா ராயிடம் ரஜினி ‘இந்த ஜென்டில்மேன் யாருனு தெரியுமா? 1977 ஆம் ஆண்டு நான் நடித்த காயத்ரி என்ற படத்தில் எனக்கு மாமனராக நடித்தார். இப்போது எனக்கு அப்பாவாக நடிக்கிறார்’என ஆங்கிலத்தில் டெல்லிகுமாரை பற்றி பெருமையாக சொன்னாராம்.
இதை கேட்டதும் டெல்லிகுமாருக்கு ஒரே ஆச்சரியமாம். இத்தனை வருடங்களை கடந்தும் பழசை மறக்காத மனிதராக இருக்கிறாரே? இந்த விஷயத்தை நான்தான் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் ரஜினி சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டார் என்று வியப்போடு டெல்லி குமார் கூறினார்.
Thalapathy 69: விஜய்…
இளையராஜா 'இசைஞானி'…
இந்தியா முழுவதும்…
தனுஷ் இயக்கத்தில்…
ஆர்.ஜே பாலாஜி…