காதலிக்காக நிஜமாகவே பச்சை மிளகாயைத் தின்று அசத்திய தனுஷ்... அட அவர் அப்பவே அப்படித்தான்!..

by sankaran v |   ( Updated:2024-01-06 02:57:12  )
Dhanush 23
X

Dhanush 23

தனுஷ் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகம் ஆனார். அப்போது அவரது உடலைப் பார்த்து இவரெல்லாம் ஹீரோவா என ஒரு சிலர் கிண்டல் செய்தனர். தொடர்ந்து அவரது படங்கள் கவர்ச்சியை நம்பி ஓடுவதாக சிலர் தெரிவித்தனர். நடிப்பைப் பொறுத்தவரை அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் இருந்து நடிப்பில் திறமையைக் காட்டத் தொடங்கினார்.

தொடர்ந்து சிம்புவுடன் போட்டி போடுவதாக ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டார். அதன்பின் அவரது நடிப்பில் பல பரிமாணங்கள் தென்பட்டன. அவரது திறமையை மெருகேற்றி திரையுலகில் தனக்கான ஒரு தனியிடத்தைப் பிடித்து விட்டார்.

இதையும் படிங்க... ஏங்க வெங்கட் பிரபுக்கு இந்த பழக்கமே இல்ல!… அப்புறம் எப்படி? கோட்டும் காப்பி தான்!

ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம் நடிகர் தனுஷ் பற்றி படப்பிடிப்பில் நடந்த ஒரு சில சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

பூபதி பாண்டியன் ஒரு நல்ல எழுத்தாளர். இவருக்கும் நடிகர் தனுஷூக்கும் நல்ல நட்பு இருந்து வந்தது. தனுஷ் இன்று இவ்ளோ பெரிய உயரத்துல இருக்காருன்னா அதுக்கு அவரு பயங்கரமா ஹார்டு ஒர்க் பண்ணிருக்காரு.

DK

DK

தேவதையைக் கண்டேன் படத்துல ஒரு ரியாலிட்டி ஷோ இருக்கும். காதலிக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்னு சொல்வார் தனுஷ். முதலில் பச்சை மிளகாயை சாப்பிடுவது போல ஒரு சீன் வந்தது. பச்சை மிளகாயை சாப்பிடுறதுக்குப் பதிலா பீன்ஸ் சாப்பிடுங்க. அதை நாம மிளகாய் சாப்பிடுற மாதிரி காட்டிரலாம்னு பூபதி சொன்னார்.

இதையும் படிங்க... திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

அதெல்லாம் வேணாம். மிளகாயை சாப்பிட்டா தான் அந்த உணர்ச்சி ரியலா இருக்கும். நான் சாப்பிடுறேன். ஒரு தட்டுல சீனியும், இன்னொரு பக்கெட்டுல தண்ணீரும் வைங்கன்னு சொன்னாரு. ஷாட் ரெடின்னதும் டக் டக் டக்னு 15 லருந்து 20 பச்சை மிளகாயை அப்படியே சாப்பிட்டாரு. கண்ணுல இருந்து தண்ணீ...யா வருது. கண்ணெல்லாம் சிகப்பா ஆயிட்டு. நமக்கே வந்து என்ன இப்படி நடிச்சிட்டாரேன்னு ஆச்சரியமா இருந்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதே போல சிவாஜி படத்தில் தனுஷின் மாமனரான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் பச்சை மிளகாயை சாப்பிடுவது போல ஒரு காமெடி சீன் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story