Connect with us

Cinema News

ஏங்க வெங்கட் பிரபுக்கு இந்த பழக்கமே இல்ல!… அப்புறம் எப்படி? கோட்டும் காப்பி தான்!

Venkat Prabhu: பலநாட்களாக வெங்கட் பிரபு ஆசைப்பட்ட வாய்ப்பு தான் கோட். விஜய் நடிக்கும் இப்படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இருக்கிறது. ஆனால் இந்த படம் ஜெமினி மேன் படத்தின் காப்பி தான் என சுத்திக்கொண்டு இருக்கும் சர்ச்சைக்கு திரை விமர்சகர் பிஸ்மி பதில் அளித்துள்ளார்.

லியோ படத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படம் தான் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை வெங்கட் பிரபு சயின்ஸ் பிக்‌ஷன் படமாக எடுக்கிறார். விஜய் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். சினேகா, லைலா, பிரசாந்த், பிரபு தேவா என முன்னணி நட்சத்திர கூட்டம்.

இதையும் படிங்க: திடீரென தனுஷ் படத்தை இயக்க இதான் காரணமாம்!.. அடங்க… நீங்க வெவரம் தானுங்கோ!

மைக் மோகன், எஸ்.ஜே.சூர்யா என வலுவான வில்லன்கள் இருப்பதால் இப்படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படம் ஹாலிவுட்டில் வில் ஸ்மித் நடித்த ஜெமினிமேன் படம் தான் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெங்கட் பிரபுவிடம் கேட்ட போது பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என நக்கலடித்தார்.

தற்போது இதுகுறித்து பேசி இருக்கும் பிஸ்மி, பொதுவாக புக் படிக்கும் பழக்கம் இல்லாதவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறனே இருக்காது. அப்போ புக் படிக்காத வெங்கட் பிரபு தனியாக சிந்தித்து எடுப்பாரா? வெளிநாட்டு படங்களை பார்த்து அதன் இன்ஸ்பிரேஷனில் தான் படத்தினை எடுப்பார்.

இதையும் படிங்க: பிரேமலதாதான் பொண்ணு!. ஜோசியத்தை வச்சி கேப்டனை நம்ப வச்ச குடும்பத்தினர்…

மாநாடு படமே எ டே என்ற படத்தின் காப்பி தான். கிட்டதட்ட கோட்டும் நம்ம கல்சருக்கு ஏற்ற போல மாற்றி எடுக்கப்படும். முயற்சி வித்தியாசமாக இருந்தாலும் கூட அது சொந்த கதையாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். காப்பி அடித்து எடுத்தால் நல்லா இருக்காது எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top