Categories: latest news

இதெல்லாம் கொஞ்சம் ஓவர்! இந்த ஒரு காரணத்துக்காக அந்தப் படத்தில் நடிக்க தயங்கிய தனுஷ்.. இத நம்பனுமா

Actor Dhanush: எந்த கதாபாத்திரமானாலும் அதற்கேற்ப தன்னை தயார்படுத்தி நடிக்கும் நடிகர்களில் மிகவும் கைதேர்ந்தவராக இருக்கிறார் நடிகர் தனுஷ். சவாலான கேரக்டரானாலும் துணிச்சலோடு நடித்து மக்களின் கைத்தட்டல்களை எளிதாக வாங்கி விடுகிறார். துள்ளுவதோ இளமையில் ஆரம்பித்து கேப்டன் மில்லர் வரைக்கும் தனுஷின் விதவிதமான பரிணாமங்களை பார்க்க முடியும்.

ஒவ்வொரு படத்திற்கும் தன்னை எப்படி தயார்படுத்தியிருக்கிறார் என்பதை அந்தப் படத்தின் மூலமாகவே கண்டு கொள்ள முடியும். அதுவும் இவ்வளவு குறுகிய காலத்திலேயே சிவாஜி, கமல் இவர்களுக்கு இணையான ஒரு அந்தஸ்தை பெற்று விளங்குகிறார் தனுஷ். உண்மையிலேயே இவர் நடிப்பில் அசுரன்தான். தனுஷ் நடித்த ஒவ்வொரு படங்களுமே அவர் பேரை சொல்லும்.

இதையும் படிங்க: படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி…

நடிப்பிற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் தனுஷ் இப்போது அவரது 50வது படமான ராயனில் பிஸியாக இருக்கிறார். இந்தப் படம் அவரே இயக்கி நடிக்கின்ற படம். இந்தப் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் குவிந்து கிடக்கிறார்கள். இந்தப் படத்திற்கு பிறகு தனுஷ் இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன்தான் இயக்குகிறார்.

இளையராஜா பயோபிக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. வித்தியாசமான கதைகளத்தை தேர்வு செய்யும் நடிக்கும் தனுஷ் அவர் நடித்த படங்களில் அதிக வரவேற்பை பெற்ற படமாக புதுப்பேட்டை திரைப்படம் அமைந்தது. ஆனால் அந்த படத்தில் முதலில் நடிக்க தனுஷ் தயங்கினாராம். புதுப்பேட்டை பட கதையை கேட்டதும் சின்னப் பைனா இருக்கேன் நான். ஆனால் இந்த கேரக்டர் ஒரு டான் மாதிரி வடிவமைத்திருக்கிறீர்கள்.

இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இது செட் ஆகுமா!. கட்டையை போட்ட பிரபலம்!. சின்ன கவுண்டர் உருவான கதை!..

இது எனக்கு சரியா இருக்காது என தனுஷ் சொல்லியிருக்கிறார். அப்போது தனுஷை அழைத்துப் பேசிய பாலகுமாரன் பசங்கனா அப்படித்தான் இருப்பாங்க. யோசிக்காம நடி. நீதாண்டா நடிக்கனும் என சொல்லி தனுஷை நடிக்க வைத்திருக்கிறார். ஆனால் இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் வரும் என ரசிகர்கள் கேட்ட வண்ணம் இருக்கிறார்கள். அந்தளவுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படமாக புதுப்பேட்டை திரைப்படம் அமைந்தது.

 

Rohini

Recent Posts

மேடையில் மஞ்சு வாரியருக்கு உதட்டில் முத்தம் கொடுத்த ரசிகை! – வைரலாகும் வீடியோ

தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…

9 hours ago

வயசு ஏறினாலும் அந்த ஸ்டைல் மாறவே இல்லை…சிம்ரன் லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…

10 hours ago

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

17 hours ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

18 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

19 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

1 day ago