Connect with us
rajini

Cinema History

படப்பிடிப்பில் ரவிக்குமார் காட்டிய கோபம்!.. நெகிழ்ந்து போய் கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி…

சினிமா உலகில் படப்பிடிப்பு தளங்களில் எப்போதும் ஏற்றத்தாழ்வு என்பது இருக்கும். விஜயகாந்த் போல சில நடிகர்கள் மட்டுமே எல்லோருக்கும் ஒரே மாதிரி சாப்பாடு கொடுங்கள் என சொல்வார்கள். எம்.ஜி.ஆருக்கு பின் விஜயகாந்த் மட்டுமே அதை செய்தார். பெரும்பாலும் 3 வகைகளில் உணவுகள் பரிமாறப்படும்.

கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர் போன்ற முக்கியமானவர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவுகள் வரவழைக்கப்படும். அடுத்த நிலையில் உள்ள நடிகர், நடிகைகளுக்கு படப்பிடிப்பு தளங்களிலேயே சமைக்கப்பட்ட உணவுகள் பறிமாறப்படும். அடுத்து உதவி இயக்குனர்கள், லைட் மேன்கள் உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், உதவியாளர்களுக்கும் மிகவும் சாதரணமான உணவு கொடுக்கப்படும்.

இதையும் படிங்க: கடவுளுக்கு நெருக்கமாக இருந்த ரஜினிகாந்த்..! வைரலான வீடியோ… ரசிகர்கள் உற்சாகம்

புரியாத புதிர் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மாறியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதன்பின் சேரன் பாண்டியன் உள்ளிட்ட சில படங்கள் மூலம் பிரபலமானார். சரத்குமாரை வைத்து நாட்டாமை, ஊர் மரியாதை, நட்புக்காக என பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

மேலும், ரஜினியை வைத்து முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். படையப்பா ரஜினியின் சொந்த படம். அதாவது அவர்தான் இப்படத்தின் தயாரிப்பாளர். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது மதிய உணவு இடைவேளையில் எல்லோருக்கும் மட்டன் பறிமாறப்பட்டது.

இதையும் படிங்க: ஆஹா இது அவரு சொன்னதுல்ல!.. எம்ஜிஆர் வசனத்தை பஞ்ச் டயலாக்காக மாற்றி மாஸ் காட்டிய ரஜினி..

அப்போது வயதான லைட் மேன் ஒருவர் இன்னொரு கரண்டி மட்டன் கேட்டிருக்கிறார். ஆனால், கொடுக்க மறுத்த பரிமாறிய நபர் அவரை அசிங்கமாக திட்டியிருக்கிறார். இதை அருகிலிருந்து பார்த்த கே.எஸ்.ரவிக்குமார் கோபப்பட்டு பரிமாறியவரை போட்டு வெளுத்துவிட்டாராம்.

‘உன்னால் இந்த லைட்டை தூக்க முடியுமா. அவர் தூக்குவார். ஒரு கரண்டி சேர்த்து கொடுப்பதில் என்ன ஆகிவிடப்போகிறது. அவருக்கு கொடு. எவ்வளவோ லட்சம் செலவாகுது. இதுல என்ன ஆயிடப்போகுது’ என கத்த பரிமாறியவர் மிரண்டு போயிருக்கிறார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரஜினி கே.எஸ்.ரவிக்குமாரை கட்டிப்பிடித்து பாராட்டினாராம்.

இதையும் படிங்க: ராத்திரி ஷோவிற்கு திருட்டுத்தனமாக சென்ற ரஜினிகாந்த்… வீட்டில் மாட்டிவிட்ட மழை..

google news
Continue Reading

More in Cinema History

To Top