ஆஹா இது அவரு சொன்னதுல்ல!.. எம்ஜிஆர் வசனத்தை பஞ்ச் டயலாக்காக மாற்றி மாஸ் காட்டிய ரஜினி..

சூப்பர்ஸ்டார் படம் என்றாலே அவரது ஸ்டைல் தான் நம் நினைவுக்கு வரும். ஆரம்பத்தில் ஸ்டைலுக்கு முக்கியத்துவம் கொடுத்த ரஜினி, வளர வளர தனது வசனங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். எம்ஜிஆர் படங்கள் என்றாலே தத்துவ வசனங்கள் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும். அதுபோல தன்னோட படங்களிலும் ஏதாவது ஒரு தத்துவத்தை பஞ்ச் டயலாக்காகப் பேசி அசத்தினார் ரஜினிகாந்த்.

அவரது பஞ்ச் டயலாக்குகள் மூலை முடுக்கு எங்கும், பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்ப ஆரம்பித்தது. நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரின்னு பாட்ஷா படத்தில் பேசி அசர வைப்பார். அந்த ஆண்டவன் சொல்றான். இந்த அருணாச்சலம் செய்றான்னு அருணாச்சலம் படத்தில் பேசி அசத்தியிருப்பார். அதே போல சூப்பர்ஸ்டார் ஒரு படத்தில் பேசிய பஞ்ச் வசனம் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் உண்மை வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்துடன் ஒத்துப்போகிறது. அது என்ன டயலாக் என்று பார்க்கலாமா...

இதையும் படிங்க: கை நழுவிப்போன முதல் ஹீரோ பட வாய்ப்பு!.. ஹீரோவா நடிக்க எம்.ஜி.ஆர் பட்ட பாடு!..

பிரபல இயக்குனர் ஸ்ரீதர் கடும் நிதி நெருக்கடியில் இருந்தார். அவர் எம்ஜிஆரைப் பார்த்து அண்ணே எனக்கு ஒரு படம் பண்ணி தாங்கன்னு கேட்டாராம். அப்போது சம்பளம் வாங்காமல் எம்ஜிஆர் நடித்துக் கொடுத்த படம் தான் உரிமைக்குரல். படம் மாபெரும் வெற்றி. 125 நாள்களைக் கடந்து ஓடியது. அதன்பிறகு தயாரிப்பாளர் எம்ஜிஆரை சந்தித்துப் பணம் கொடுக்கச் சென்றாராம். அதற்கு கொடுத்த பொருளையும் சொன்ன பொருளையும் திரும்ப பெறுவதில்லை என்றாராம்.

இப்போ விஷயத்துக்கு வருவோம். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில் கொடுத்த வாக்கையும், கொடுத்த பொருளையும் திருப்பி வாங்கறதே இல்ல... ரஜினியோட பஞ்ச் டயலாக் இது.

இதையும் படிங்க: ராத்திரி ஷோவிற்கு திருட்டுத்தனமாக சென்ற ரஜினிகாந்த்… வீட்டில் மாட்டிவிட்ட மழை..

கே.எஸ்.ரவிகுமாரின் இயக்கத்தில் 1995ல் வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் முத்து. இதில் தந்தை மகன் என்ற இரு வேடங்களில் ரஜினி நடித்து அசத்தியிருப்பார். இதில் தந்தை வேடத்தில் வரும் ரஜினிகாந்த் அடிக்கடி சொல்லும் டயலாக் இது.

இந்தப்படம் ஜப்பானில் கூட வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ரஜினியுடன் இணைந்து சரத்பாபு, மீனா, ராதாரவி, செந்தில், வடிவேலு, ரகுவரன், காந்திமதி, பொன்னம்பலம், விசித்ரா, ஜோதிலட்சுமி, சுபாஸ்ரீ உள்பட பலர் நடித்துள்ளனர்.

Related Articles
Next Story
Share it