Connect with us
Dhanush

Cinema History

அடுத்தடுத்து மெகா படங்களில் பிசியான தனுஷ்… இயக்குனராகவும் பட்டையைக் கிளப்புவாரா?..

பொங்கலுக்குத் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் கேப்டன் மில்லர். இந்தப் படத்தில் தனுஷ் முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்து அசத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தைத் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் எடுக்க உள்ளார். இதற்கான படப்பிடிப்பும் துவங்கி விட்டது.

DNS என்று தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை தெலுங்கு பட தயாரிப்பாளர் சேகர் கம்முலா எழுதி இயக்கியுள்ளார். நாகர்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, பாலிவுட் நடிகர் ஜிம் சர்ப் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் டைட்டிலில் உள்ள டிஎன்எஸ் என்ற எழுத்துக்கள் தனுஷ், நாகர்ஜூனா, சேகர் கம்முலா ஆகியோரைக் குறிப்பதாக உள்ளன.

கடந்த வியாழக்கிழமை இந்தப் படத்துவக்க விழாவுக்கான பூஜை போடப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு புதன்கிழமை தொடங்கியதாகவும், தனுஷ் நடித்த முக்கிய காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

DNS

DNS

படத்திற்கான ஆடியோவை ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் இயக்குனர் சேகர் கம்முலாவின் அமிகோஸ் கிரியேஷன்ஸ் ஆகியவற்றின் கூட்டுத் தயாரிப்பு நிறுவனம் டிஎன்எஸ் ஆதித்யா மியூசிக் ஏற்கிறது. ஒளிப்பதிவாளராக நிகேத் பொம்மியும், தயாரிப்பு வடிவமைப்பாளர்களாக ராமகிருஷ்ணா சப்பானி மற்றும் மோனிகா நிகோட்ரே ஆகியோரும் உள்ளனர். மேலும் நடிக்க உள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும்.

கடந்த சில மாதங்களாகவே பிசியாக இருக்கிறார் தனுஷ். சமீபத்தில் அவரது 50வது படத்தை இயக்கி முடித்தார். தொடர்ந்து அவரது இயக்கத்தில் வரும் 2வது படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்? அதன்பிறகு தனுஷ் ஆனந்த் எல் ராய் உடனும், மாரி செல்வராஜ் உடனும் படங்களில் இணைய இருக்கிறாராம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்து இயக்கும் டி50 படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புக்குள்ளாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷான், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், வரலட்சுமி சரத்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

 

google news
Continue Reading

More in Cinema History

To Top