திருமணத்திற்கு பின் அப்பா – அம்மாவை ஒதுக்கிய தனுஷ்!.. ஐஸ்வர்யாதான் காரணமா?!..

Published on: May 17, 2024
dhanush
---Advertisement---

துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் தனுஷ். இவரின் அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜா. தமிழ் திரையுலகில் சில வெற்றிப்படங்களை கொடுத்தவர். கையில் இருந்த பணமெல்லாம் சொந்த தயாரிப்பில் போய்விட்டது. எனவே, சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் போய் குடியேறலாம் என நினைத்தார் கஸ்தூரி ராஜா.

அப்போது அவரின் மூத்த மகன் செல்வராகவன் ‘போவதற்கு முன் கடைசி முயற்சியாக ஒரு படம் எடுப்போம். நான் இயக்குகிறேன். 60 லட்சம் ரெடி பன்ணி கொடுங்க’ என அப்பாவிடம் சொல்ல கடன் வாங்கி உருவான படம்தான் துள்ளுவதோ இளமை. அந்த படம் ஹிட் அடிக்கவே கஸ்தூரி ராஜா குடும்பம் கடனிலிருந்து மீண்டது.

இதையும் படிங்க: எனக்கு ராஜாவா தான் வாழுறேன்… மொத்த தென்னிந்திய சினிமாவை கட்டிப்போட்ட அனிருத்… செமையா இருக்கே!

அதோடு, காதல் கொண்டேன், திருடா திருடி என 3 தொடர் வெற்றிப்படங்களை தனுஷ் கொடுக்கவே தன்னை வாழ வைத்த கடவுள் என மகன் தனுஷை பார்த்தார் கஸ்தூரி ராஜா. துவக்கத்தில் அப்பா, அண்ணன் அறிவுரைப்படி நடித்து வந்த தனுஷ் ஒரு கட்டத்தில் சுயமாக முடிவெடுக்க துவங்கினார். குறிப்பாக அது துவங்கியது திருமணத்திற்கு பின்னர் என்றே சொல்லலாம். இத்தனைக்கும் அம்மா செல்லமாக இருந்தவர்தான் தனுஷ்.

ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்தபின் தனுஷ் மொத்தமாக மாறிப்போனார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்த அளவுக்கு எனில் ஒருமுறை தனுஷுன் அம்மா பேட்டி கொடுத்தபோது அவரிடம் தனுஷ் பற்றி கேட்கப்பட்டது. அப்போது ‘என் மகனிடம் பேசியே பல நாட்கள் ஆகிவிட்டது. அவன் எப்போது என்னிடம் பேசுவான் என ஏங்குகிறேன்’ என சொல்லி கண்ணீர் விட்டார்.

இதையும் படிங்க: இவன கூட்டிட்டு போன மீசையை எடுத்துக்குறேன்!.. எம்.ஜி.ஆரின் அம்மாவை மிரட்டிய முதலாளி…

அந்த அளவுக்கு அப்பா – அம்மாவை பிரிந்திருந்தார் தனுஷ். தனியாக வீடு கட்டி அங்கு ஐஸ்வர்யாவுடன் வசித்து வந்தார் தனுஷ். அதோடு, தொடர்ந்து படப்பிடிப்பு என்பதால் அப்பா – அம்மாவை போய் பார்க்க கூட அவருக்கு நேரமில்லை. அதை அவர் தவிர்த்தும் வந்தார் என சொல்லப்படுகிறது.

dhanush

போயஸ் கார்டனில் ரஜினிக்கு போட்டியாக வீடு கட்டினார் தனுஷ். அதற்கான வேலைகள் துவங்கிய போது அங்கு ஐஸ்வர்யா இருந்தார். தனுஷின் அப்பா, அம்மா இல்லை. ஆனால் வீடு கட்டி குடியேறும்போது தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்து போயிருந்தார். அதனால் வேறு வழியில்லாமல் அப்பா, அம்மாவை அழைத்து விழாவை நடத்தினார் என சொல்லப்படுகிறது. இப்போதும் கூட படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மகன்களுடன் மட்டுமே அவர் நேரம் செலவழிப்பதாகவும், பெற்றோரை பார்க்க செல்வதில்லை எனவும் சொல்லப்படுகிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.