எனக்கு ராஜாவா தான் வாழுறேன்… மொத்த தென்னிந்திய சினிமாவை கட்டிப்போட்ட அனிருத்… செமையா இருக்கே!

 
Anirudh: தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜாவாக தற்போது பெரும்பாலான திரைப்படங்களில் இசையமைத்து வருகிறார் அனிருத். அவர் கைவசம் இருக்கும் படம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களை பாக்ஸ் சொல்ல வைக்கிறது அந்த லைன்அப். தனுஷ் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய மூன்று திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்தில் வொய் திஸ் கொலவெறி பாடல் அவரை வேற லெவலில் வைரலாகியது. தொடர்ச்சியாக அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுக்கு இசை அமைத்து வந்தார். இதையும் படிங்க:  விருது வாங்க போக கார் கூட இல்லாத நடிகை!.. எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!.. நெகிழ்ச்சி சம்பவம்!… இந்நிலையில் கடந்த வருடம் அனிருத் இசையமைப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அப்படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் பாடல் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்ததாக சூப்பர் ஸ்டாரே வெற்றி விழாவில் குறிப்பிட்டிருந்தார்.  இது மட்டுமல்லாமல் பாலிவுட் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜகன் திரைப்படத்திற்கும் அனிருத் தான் இசை அமைத்திருந்தார்.  அப்படமும் ஆயிரம் கோடி வசூலை குவித்த நிலையில் அனிருத்தின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. இதனால், அவர் இசையமைப்பில் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மற்ற மொழி சினிமாவிலும் நிறைய படங்கள் கைவசத்தில் வைத்திருக்கிறார். ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷாருக்கான் நடிப்பில் உருவாக இருக்கும் கிங் படத்திற்கும் அனைத்து தான் இசையமைக்க இருக்கிறார். இதையும் படிங்க:  எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!… தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன்,  கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் இரண்டு மற்றும் மூன்றாம் பாகம், அஜித் குமார் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி,  சிவகார்த்திகேயனின் 23 வது திரைப்படம், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எல்ஐசி, கவின் நான்காவது திரைப்படம் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார். இது மட்டுமல்லாமல், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும்  தேவாரா திரைப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கும் அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார்.  அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்க இருக்கும் திரைப்படத்திற்கும், விடி12 எனப் பெயரிடப்பட்டுள்ள விஜய தேவரகொண்டா படத்திற்கும், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் டைசன் மற்றும் கௌதம் தின்னனுரி நடிப்பில் மேஜிக் படங்களுக்கும் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
Akhilan
Akhilan

3138 Articles

From Around the web