எப்படியோ சிக்கலில் இருந்து விடுபட்ட தனுஷ்! தப்பிக்க இத்தனை கோடியா?
Actor Dhanush: தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெட் அலர்ட் போடப்பட்ட விவகாரம் நடிகர் சங்கத் சங்கத்தில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தனுஷ் மட்டும் அல்லாமல் விஷால் மீதும் ரெட் அலர்ட்டை பிறப்பித்தது. ஆனால் தனுஷ் விவகாரம் தான் பெரிய அளவில் சூடு பிடித்தது.
அதற்கான பின்னணி காரணம் என்னவெனில் 5 ஸ்டார் கதிரேசனிடம் மூன்று கோடி ரூபாய் கடனாக பெற்ற தனுஷ் அதிலிருந்து அவருக்கு படம் ஏதும் நடித்துக் கொடுக்கவில்லை என்பதால் இத்தனை வருட காலம் காத்திருந்த பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிப்பாளர் சங்கத்திடம் தனுஷ் மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதுதான் இப்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஓவர் ஆசையில் இருந்த ரசிகர்களுக்கு புஸ்ஸுனு போச்சே… கூலியில் இணைந்த அடுத்த பிரபலம்…
இதன் காரணமாகத்தான் தனுஷ் மீது தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து ரெட் அலர்ட் ஒன்றை பிறப்பித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக தனுஷ் அவருக்கு நான் படம் பண்ண முடியாது என கூறி இருந்தார். இன்னொரு பக்கம் பைவ் ஸ்டார் கதிரேசன் மூன்று கோடி கொடுத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் வட்டியுடன் சேர்த்து மொத்தம் 16 கோடி தருமாறு கூறியிருந்தார்.
ஆனால் தனுஷ் தரப்பில் 16 கோடி தர முடியாது 10 கோடி என்ற வகையில் அந்த பேச்சை இப்போது முடித்து வைத்திருக்கிறார்களாம். அதாவது தனுஷ் நஸ்ரியா நடிப்பில் 2013 ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் நையாண்டி. இந்த திரைப்படத்தை தயாரித்தவர் பைவ் ஸ்டார் கதிரேசன். அந்த சமயத்தில் தான் 5 ஸ்டார் கதிரேசன் தனுஷுக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் என அந்த மூன்று கோடியை கொடுத்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: திரிஷ்யம் பிரபலமும் இப்படிதானா? ஊர்வசிக்கே பாலியல் சீண்டலால் சோதித்த இயக்குனர்…
கிட்டத்தட்ட 11 வருடங்கள் ஆன நிலையில் அந்த பணம் இப்போது வட்டியோடு சேர்த்து செட்டில் செய்திருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முரளி ராமசாமியுடன் இணைந்து ஏற்கனவே ஒரு படத்தில் 30 சதவீதம் நடித்த முடித்திருந்த தனுஷ் அந்தப் படத்தை திரும்பவும் ஆரம்பிக்க முடியாது என கூறியிருக்கிறார்.
அதனால் புதியதாக ஒரு படத்தை எடுக்கலாம். அதில் நான் நடிக்கிறேன் எனக் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் தனுஷ் முரளி ராமசாமி இணைந்து உருவாகும் அந்த படத்தை ரெட் ஜெயண்டும் சேர்ந்து தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. ஆக மொத்தம் ஒரு பெரிய சிக்கலில் இருந்து தனுஷ் முழுவதுமாக விடுபட்டிருக்கிறார் என கோடம்பாக்கத்தில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோட் ஃபீவர் ஸ்டார்ட்!.. நாம போட்டோக்களை எறக்கணும்!.. அஜித்தை பங்கம் பண்ணிய பிரபலம்!…