புடிச்சாலும் புளியங்கொப்பா புடிச்ச துருவ் விக்ரம்! கூடிய சீக்கிரமே அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுக்கப்போகும் வாரிசு

by Rohini |
vikram
X

vikram

சினிமாவில் பெரும்பாலும் வாரிசுகளின் ஆதிக்கமே இருந்து வருகின்றன. ஆனால் ஒரு சில நடிகர்கள் தனது சொந்த முயற்சியால் உழைத்து சின்ன சின்ன படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்று வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை எப்படியாவது ஒரு நல்ல இடத்திற்கு கொண்டு வந்து விட வேண்டும் என முயற்சித்து வருகிறார் விக்ரம். முதலில் ஆதித்ய வர்மா என்ற படத்தில் தனது அறிமுகத்தை பதிவு செய்த துருவ் விக்ரம் அந்தப் படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் படம் என்னமோ வரவேற்பை பெறவில்லை.

இதையும் படிங்க : யார் என்ன கொக்கி போட்டாலும், சொல்லிடாதீங்கணே… லோகேஷ் பேச்சை மீறாத லியோ படக்குழு!

அதனை அடுத்து அப்பாவுடனேயே சேர்ந்து மகான் என்ற படத்தில் ஒரு முரட்டு போலீஸாக தன் அப்பாவையே மிரட்டி அடி துவைத்திருப்பார். அதில் துருவ் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டது. எனினும் ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தார் துருவ் விக்ரம்.

இந்த நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டு வீரர் கணேசன் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஒரு பயோபிக்கில் நடிக்க இருக்கிறாராம் துருவ் விக்ரம்.

இது ஒரு பக்கம் இருக்க மாரி செல்வராஜின் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நான்காவதாக ஒரு பட வாய்ப்பு வந்திருக்கிறது. குறுகிய பட்ஜெட்டில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த டாடா படத்தின் இயக்குனருடன் துருவ் விக்ரம் இணைய இருக்கிறாராம்.

இதையும் படிங்க: விஜயால் தான் ஜெய்லர் வாய்ப்பு கிடைச்சது… அவருக்கு தான் தேங்ஸ் சொல்வேன்.. சிவராஜ்குமார் சொன்ன சர்ப்ரைஸ்!

ஆனால் இந்தப் படத்தின் மிகப்பெரிய ஹைலைட்டே அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான்தான் இசையமைக்கிறாராம். இதன் மூலம் முதன் முறையாக ஏ.ஆர்.ரகுமானும் துருவ் விக்ரமும் இனைந்து பணியாற்றும் படமாக இந்த நான்காவது படம் அமையும் என சொல்லப்படுகிறது.

ஒரு புறம் மாரி செல்வராஜ், மறுபுறம் ஏ.ஆர்.ரகுமான் என இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக துருவ் விக்ரம் தன்னுடைய வழியை தேர்ந்தெடுத்து பயணித்து வருகிறார். கூடிய சீக்கிரம் தன் அப்பாவுக்கு ரெஸ்ட் கொடுத்து இவர் டேக் ஓவர் பண்ணுவார் என நம்புவோம்.

Next Story