Connect with us

Cinema News

விஜயால் தான் ஜெய்லர் வாய்ப்பு கிடைச்சது… அவருக்கு தான் தேங்ஸ் சொல்வேன்.. சிவராஜ்குமார் சொன்ன சர்ப்ரைஸ்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெய்லர் படத்துக்கு ஏகப்பட்ட மவுஸ் அதிகரித்ததற்கு காரணமாக பல விஷயங்கள் சொல்லப்பட்டால், பல மொழி சூப்பர்ஸ்டார்கள் இணைந்ததே முக்கிய காரணம் என்கிறார் திரை விமர்சகர்கள். கன்னடா, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழியின் ஸ்டார் நாயகர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது.

அனிருத் இசையில் நெல்சன் திலீப்குமாரின் கம்பேக் படமாகி இருக்கிறது ஜெய்லர். இப்படத்தில் மலையாளத்தில் இருந்து மோகன்லால், கன்னடாவில் இருந்து சிவராஜ்குமார், இந்தியில் இருந்து ஷாக்கி செராப் எனப் பலரும் நடித்திருந்தனர். ரஜினியை ரசித்த அதே கூட்டம் மோகன்லாலுக்கும், சிவராஜ்குமாருக்கும் இருந்தது.

ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்டது 10 நிமிட காட்சிகள் தான். அதிலும் தனது ஆக்‌ஷனுக்கு கை எதுக்கு கண் அசைவு போது என அவர் கிளைமேக்ஸ் கொடுத்த எண்ட்ரியெல்லாம் பட்டாசு தெறிக்கும் ரகமாகவே மாறி அமைந்து இருந்தது. இந்நிலையில் தற்போது கோலிவுட்டிலும் வைரல் நாயகனாகி இருக்கிறார் சிவராஜ்குமார்.

இதையும் படிங்க: தயாரிச்சிட்டா அவங்களால இதெல்லாம் பண்ண முடியாது… ஜெய்லர் வெற்றிக்கு நெசமாவே இதான் காரணம்!

அதனால், நானே போய் அவரை நேரில் பார்த்தேன். விஜய் கூட நானே வரணும் சொன்னேன் எனக் கூறினார். அப்போது நான் தாடி வைத்து இருந்தேன். என்னை பார்த்த நெல்சனுக்கு என்னுடன் ஒரு படம் செய்ய ஆசை வந்ததால் என்னிடம் கேட்டார். ஜெய்லர் படத்தில் ஒரு சின்ன ரோல் செய்து தர முடியுமா எனக் கேட்டார்.

ரஜினி படம் என்றதும் கதையெல்லாம் வேண்டாம் என உடனே ஓகே சொல்லிவிட்டேன். அப்படி இருந்தும் கூட டான்ஸ் கன்னடா டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சி ஷூட்டிங்கில் என்னை வந்து பார்த்து இந்த கதையை சொன்னார். நானும் அப்போதே கால்ஷூட் கொடுத்து ஓகே சொல்லிவிட்டதாக தெரிவித்தார்.

தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ்குமார் ஒரு ரோலில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் மீது ரசிகர்கள் எதிர்பார்ப்பினை வைத்திருப்பதாக கூறுகின்றனர். ஜெய்லர் படத்தால் இனி சிவராஜ்குமாருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவியும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: எல்லாம் கூடி வந்தும் கமல் கூட நடிக்க முடியாம போச்சி!.. புலம்பும் மன்சூர் அலிகான்….

google news
Continue Reading

More in Cinema News

To Top