More
Categories: Cinema News latest news

வாழ்நாளில் வாங்காத சம்பளம்! ரஜினியால் பகத்பாசில் காட்டில் கொட்டிய பண மழை..

மலையாள உலகில் முடி சூடா மன்னனாக இருக்கிறாரோ இல்லையோ தமிழ் சினிமாவின் ஒரு போற்றப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பகத் பாசில். ஆரம்பகாலங்களில் ஒரு சில நடிகர்களை போல் பல விமர்சனங்களுக்கு ஆளான பகத் கொஞ்சம் கூட பின்வாங்காமல் தொடர்ந்து தன் உழைப்பை கொடுத்து வந்தார்.

விக்ரம் படம் அவரை எங்கேயோ கொண்டு சென்றது. மாமன்னன் திரைப்படத்திலும் ஒரு காட்டுமிராண்டித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் அபிமானத்தை பெற்றார். அதே போல் வில்லன் கதாபாத்திரத்திற்கு அஸ்திவாரம் போட்டது புஷ்பா படம் .

Advertising
Advertising

இதையும் படிங்க : சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கும் லைக்கா!.. விஜய் மகன் இயக்குனர் ஆனதன் பின்னணி!..

அந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக வந்து அனைவரையும் மிரள வைத்திருப்பார். ஒரு மாஸான நடிப்பை காட்டி அசர வைத்திப்பார். அதன் விளைவுதான் கோலிவுட்டில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறி இருக்கிறார்.

அடுத்ததாக ரஜினியின் 170 வது படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறாராம் பகத் பாசில். ஏற்கனவே அந்தப் படத்தில் அமிதாப் பச்சன் நடித்தாலும் பகத் பாசில் தான் மெயின் வில்லனாக நடிக்கிறாராம்.

த.ச.ஞானவேல் இயக்கத்தில் தயாராகும் ரஜினி 170 படத்திற்காக பகத் பாசிலுக்கு கொடுக்கப்பட இருக்கும் சம்பளம் 8 கோடியாம். மாமன்னன் திரைப்படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் 5 கோடியாம்.

இதையும் படிங்க : நான் மட்டும் என்ன ஒசத்தியா? தலையணை இல்லாத தூக்கம்… ஓடையில் குளியல்.. ரஜினியின் எளிமை!

அதுமட்டுமில்லாமல் மலையாள நடிகர்கள் பெரும்பாலும் வாங்கக் கூடிய அதிகபட்ச சம்பளமே 20 கோடியில் இருந்து 30கோடி வரைதானாம். நம் தமிழ் சினிமாவில் தான் 100லிருந்து தற்போது 200 கோடி வரை சம்பளம் பெறுகிறார்கள். மேலும் பகத் பாசில் இதுவரைக்கும் வாங்கிய சம்பளத்தில் ரஜினி 170 படத்திற்காக வாங்கப் போகும் சம்பளம்தான் அதிக சம்பளமாம்.

Published by
Rohini

Recent Posts