சின்ன மீனை போட்டு பெரிய மீனை புடிக்கும் லைக்கா!.. விஜய் மகன் இயக்குனர் ஆனதன் பின்னணி!..
Vijay son Sanjay: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருப்பவர் விஜய். அப்பா மூலமாக சினிமாவில் வளர்ந்தாலும் ஒரு கட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கி தன்னை மெருகேற்றிக்கொண்டார். சாக்லேட் பாயாக நடிக்க துவங்கினாலும் ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கினார்.
ரஜினியின் ரூட்டியில் பயணித்து இப்போது அவருக்கு போடியாக பேசப்படும் நடிகராக உயர்ந்திருக்கிறார். இப்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருப்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த சூப்பர்ஸ்டார் இல்லைங்க!.. அடுத்த உலக நாயகனாகவே ஆகப் போகும் விஜய்!.. விளங்குமா?..
விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகன் இருக்கிறார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு வந்து நடனமாடுவார். அதன்பின் அவரின் சில புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகும். விஜயை தொடர்ந்து ஜோசன் சஞ்சையும் நடிகராக வருவார் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அவருக்கு இருந்ததோ இயக்குனர் ஆர்வம்தான். இதற்காக வெளிநாடுகளில் இயக்கம் பற்றிய சில படிப்புகளை படித்து பயிற்சி பெற்றார். ஒரு குறும்படத்தையும் இயக்கினார். ஆனால், அது வரவேற்பை பெறவில்லை. அதன்பின் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க சில இயக்குனர்கள் ஆசைப்பட்டனர். பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் விஜயை அணுகி தனது ஆசையை சொன்னார். ஆனால், ஜோசனோ எனக்கு நடிப்பதில் ஆர்வமில்லை என சொல்லிவிட்டார். இந்நிலையில், ஜேசன் சஞ்சய் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். அதுவும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
இதையும் படிங்க: உலகமே கொண்டாடிய சம்பவம்! மௌனம் காத்த விஜய் – அதுக்கு இவர் சரிப்பட்டு வருவாரா?…
இதை லைக்கா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லைக்கா நிறுவனம் பெரிய இயக்குனர்களையும் நடிகர்களையும் மட்டுமே வைத்து மட்டுமே படங்களை உருவாக்கி வருகிறது. எனவே, ஜோசன் சஞ்சய் எப்படி இதில் உள்ளே வந்தார்?.. ஒரு படம் இயக்குமளவுக்கு அவருக்கு ஆற்றல் இருக்கிறதா? என பல கேள்விகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், இதற்கு பின்னணியில் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விஜய் கத்தி படத்தில் நடித்தார். அதன்பின் அந்நிறுவனத்திற்கு அவர் இதுவரை கால்ஷீட் கொடுக்கவில்லை. அடுத்து நடிக்கவுள்ள படத்தையும் ஏஜிஎஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது. கத்தி படத்திற்கு பின் விஜயின் கால்ஷீட்டை லைக்காவால் வாங்க முடியவில்லை.
எனவேதான், சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிக்கும் விதமாக ஜேசன் சஞ்சயை இயக்குனராக அறிமுகம் செய்வதன் மூலம் விஜயின் மனதை குளிர்வித்து அவரின் கால்ஷீட்டை வாங்கிவிடலாம் என கணக்குபோடுகிறதாம் லைக்கா.
இதையும் படிங்க: ஐடி விங்கை பலப்படுத்தும் விஜய்.. ஜவான் ஆடியோ லாஞ்சில் கண்டிப்பா சர்ப்ரைஸ் இருக்கு!..
COPYRIGHT 2024
Powered By Blinkcms