Connect with us

Cinema History

இவரெல்லாம் ஒரு ஹீரோவா எனக் கேட்டவர்களுக்கு பதிலடி கொடுத்த பகத் பாசில்..!

இந்தப் பெயர் தற்போது அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நம்ம ஆண்டவர் கமலுடன் நடித்த விக்ரம் தான். இவரும் படத்தில் மெய்ன் வில்லனாக நடித்துள்ளதால் இவர் சமூக வலைத்தளங்களில் அதிகம் தேடப்படும் நபராகி விட்டார்.

மலையாள ஹீரோக்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் பகத் பாசில். ஹீரோ, வில்லன், துணைநடிகர், குழந்தை நட்சத்திரமாகவும் தனது கேரியரை தொடங்கிய இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் மலையாளி. இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். படிப்பு வராத காரணத்தால் தான் நடிக்கவே வந்தேன் என்கிறார்.

fazil

ஆக.8, 1982 எர்ணாகுளத்தில் பிறந்தார். அப்துல் ஹமீத் முகம்மது பகத் பாசில் தான் இவரது முழு பெயர். இவரது தந்தை பாசில் ஒரு சினிமா இயக்குனர். 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். அம்மா ரொவீனா. இவருக்கு 2 சகோதரிகள், ஒரு அண்ணன் உள்ளனர். ஹமீதா பாசில், பாத்திமா பாசில், அண்ணன் பர்கான் பாசில் ஆகியோரும் நடிகர்கள் தான்.

kamal, fahat fazil

படிப்பு வரலன்னாலும், 3 பள்ளிகள் மாறியிருக்கிறார் பகத் பாசில். 9 வயதில் வீட்டை விட்டு புறப்பட்டார். ஹாஸடல்ல தங்கிப் படித்துள்ளார். 26 வயதில் தான் வீட்டிற்கே திரும்பினாராம். என்ஜினீயரிங் படிக்க விரும்பினார். 2 வருடங்கள் படித்துள்ளார். இந்தப்படிப்பு நமக்கு செட்டாகாது என்று ஆர்ட்ஸ் படிப்பிற்கு யுஎஸ்ஏ சென்றார். அங்கு 2 வருஷம் படித்துள்ளார். அங்கு சர்டிபிகேட் எதுவும் வாங்கவில்லையாம். அங்கிருந்து பெங்களூரு வந்துள்ளார். வந்ததும் 3 படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவற்றில் ஒரு படம் தான் பெங்களூர் டேஸ். இங்கு தான் முதன் முதலா நஸ்ரியாவை சந்தித்துள்ளார்.

அப்போது இவர் நஸ்ரியாவைக் காதலிக்க அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் மன அழுத்தத்திற்குள்ளான நேரம் நஸ்ரியாவிடமிருந்து ஒரு க்ரீன் சிக்னல் வர, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு 7 வயதாக இருக்கும்போதே அப்பாவின் படத்தில் சிறுவயது குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தனது மகனை கையெத்தும் தூரத்து என்ற மலையாளப்படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் பாசில். இந்தப்படத்தில் நிகிதா இவருக்கு ஜோடியானார். தந்தை எதிர்பார்த்த அளவு படம் ஓடவில்லை. டேய் இந்தப்படத்துக்கு நீதான் ஹீரோடா என அப்பாவே சொல்ல…நான் அப்படி நடிக்க முடியுமா? எனக்கு ஹீரோக்குலாம் தகுதி இருக்கான்னு கேட்டார் பகத் பாசில்.

தந்தை இவரை உற்சாகப்படுத்த அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். கும்பளாங்கி நைட்ஸ் என்ற மலையாளப் படத்தை இவர் தான் தயாரித்தார். படம் பெரிய ஹிட்டானது. இவரது நடிப்புத் திறனைப் பார்த்து தமிழிலும் பல இயக்குனர்கள் நடிக்க வைத்துள்ளனர். வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், புஷ்பா…என தொடர்ந்த இவர் தற்போது உலகநாயகனுக்கே வில்லனாக நடித்துள்ளார். விக்ரம் படத்தில் 3 முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக வரும் இவரது கேரக்டர் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

vijay, fagat fazil

ஒரு விளம்பரப்படத்தில் விஜயின் குளோஸ் ப்ரண்டாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் பலரும் இவரது முதல் படத்தைப் பார்த்தவுடன் இவரெல்லாம் ஒரு ஹீரோவா என கேட்டனர். ஆனால் தற்போது இவர் மலையாள பட உலகில் ஒரு மென்மையான கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவருக்கு ரசிகைகள் அதிகம். மிகவும் எளிமையானவர். அதனால் இவரை பலருக்கும் சினிமா உலகில் பிடிக்குமாம். மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை தனது நடிப்புத் திறமையால் வாங்கிக் குவித்து வருகிறார்.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top