தமிழ் சினிமாவில் பாலியல் அத்துமீறல்? பகீர் தகவலை பகிர்ந்த பிரபல சீரீயல் நடிகர்… அடச்சே!!
தமிழ் சினிமாவில் நடைபெறும் பாலியல் அத்துமீறல் குறித்தான பேச்சுக்கள் சமீப காலமாக மிகத் தீவிரமாக எழுந்து வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த தரானா பர்கே என்ற சமூக ஆர்வலர் “மீ டூ” என்ற சொல்லாடலை பயன்படுத்த தொடங்கினார்.
அதனை தொடர்ந்து பிரபல அமெரிக்க நடிகையான அலைசா மிலானோ, ஹார்வே வின்ஸ்டைன் என்ற இயக்குனர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக “மீ டூ” என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை தொடர்ந்து உலகம் முழுவதும் “மீ டூ” என்ற ஹேஷ்டாக் மிக பிரபலமானது.
உலகம் முழுவதும் உள்ள பல நடிகைகள் உட்பட பல பிரபலங்கள் “மீ டூ” என்ற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி அவர்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து பகிர்ந்துகொண்டனர். இந்த தீ இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.
தனுஸ்ரீ தத்தா என்ற பிரபல பாலிவுட் நடிகை, நானா படேகர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒரு பேட்டியில் பகிர்ந்துகொண்டார். இதனை தொடர்ந்து இந்தியாவில் பல நடிகைகள் “மீ டூ” ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல பிரபலங்கள் மீது குற்றச்சாட்டை அடுக்கினர். இதில் பாடகி சின்மயி, வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியதை பலரும் அறிவார்கள்.
இந்த நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான ஜி.மாரிமுத்து, சினிமாத் துறையில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
“நான் உதவி இயக்குனராக பணியாற்றியபோது சினிமாவில் பாலியல் பிரச்சனைகள் இருந்தது. 1980களில் இருந்த பல சினிமா கம்பெனிகளில் இந்த வழக்கம் இருந்தது. அதாவது ஒரு தயாரிப்பாளர் ஒரு பெண்ணை தனது படத்தில் அறிமுகப்படுத்துவார். அந்த பெண்ணை வற்புறுத்தி பாலியல் தொல்லைக்கு உட்படுத்துவார்கள்.
பெண்களும் சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும் என்ற ஆசையில் அதற்கு சம்மதித்து விடுவார்கள். ஆனால் இந்த போக்கு இப்போது குறைந்துவிட்டது. எனினும் இன்றைக்கும் சில கசடுகள் இருக்கிறது. ஆனால் காலப்போக்கில் அது இல்லாமல் போய்விடும்” என அப்பேட்டியில் ஜி.மாரிமுத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாம்பை வைத்து படம் எடுத்ததுக்கு இப்படி ஒரு வரவேற்பா!… வெளிநாட்டுக்காரனையே அசரடித்த நம்மூர் தயாரிப்பாளர்…