இரண்டு மாபெரும் வெற்றிப் படங்களை தவறவிட்ட கௌதம் கார்த்திக்! என்னது கதை பிடிக்கலயா?

Actor Gautham Karthik: தமிழ் திரையுலகில் 90களில் கொடிகட்டிப் பறந்த நடிகராக கார்த்திக் இருந்தார். நவரச நாயகன் என அனைவராலும் அழைக்கப்பட்ட கார்த்திக் ஏகப்பட்ட வெற்றிப்படங்களை கொடுத்தவர். இளம் பெண்களின் மனங்களை கவர்ந்த நடிகராகவும் கார்த்திக் வலம் வந்தார்.

பொதுவாக நடிகரின் வாரிசுகள் சினிமாவில் வெற்றி பெறுவது என்பது அவரவர் அதிர்ஷ்டத்தை பொறுத்தே அமைகிறது. அந்த வகையில் கார்த்திக் போன்றே அவரது மகனான கௌதம் கார்த்திக்கும் வெற்றி நடை போடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க: தம்பிக்காக பெரிய ரிஸ்க் எடுத்த இசைஞானி!. ஆனா பாட்டும் ஹிட்டு.. படமும் ஹிட்டு…

ஆனால் இதுவரை சொல்லும்படியான வெற்றியை கௌதம் கார்த்திக் தரவில்லை என்பதுதான் வேதனை. கடல் படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமான கௌதம் கார்த்திக் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ஒரு சரியான கதைகளம் அமையவில்லை.

கார்த்திக்கை விட நன்கு நடனம் தெரிந்தவராகத்தான் கௌதம் கார்த்திக் இருந்து வருகிறார். இருந்தாலும் இன்னும் தனக்கான இலக்கை அடைய முயற்சித்துக் கொண்டுதான் வருகிறார். இந்த நிலையில் தேடி வந்த மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை தவறவிட்டிருக்கிறார் கௌதம் கார்த்திக்.

இதையும் படிங்க: அந்த படம் ஓடாதுன்னு அப்பவே தெரியும்!. தனுஷிடமே நக்கலடித்த இயக்குனர் அமீர்!…

கார்த்தி நடிப்பில் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற படமான கொம்பன் திரைப்படம் முதலில் கௌதம் கார்த்திக் வைத்துதான் எடுக்கப்பட இருந்ததாம். ஆனால் இந்த கதை எனக்கு பிடிக்கவில்லை. தனக்கு செட் ஆகாது என்று கூறி கௌதம் கார்த்திக் மறுத்துவிட்டாராம்.

அதே போல் விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய டர்னிங் பாயிண்டாக இருந்த படம் நானும் ரௌடிதான் திரைப்படம். இந்தப் படமும் முதலில் கௌதம் கார்த்திக் நடிக்க வேண்டியதாம். இதுவும் தனக்கு பிடிக்கவில்லை என்று கௌதம் கார்த்திக் மறுத்திருக்கிறார். லட்டான இரண்டு வாய்ப்புகள் வந்தும் அதை சரி வர பயன்படுத்தாமல் போய்விட்டார் நம் வாரிசு நடிகர்.

இதையும் படிங்க: என்னது த்ரிஷா இல்ல நயன்தாராவா? உங்க பொண்ணுனா என்ன வேணா பேசிடுவீங்களா? அடங்காத வனிதா விஜயகுமார்..!

 

Related Articles

Next Story