யார் சொல்லியும் கழுத்து செயினை கழட்டாத கவுண்டமணி!.. அதில் இருக்கும் ரகசியம் என்ன?..

Published on: March 30, 2024
gounamani
---Advertisement---

தமிழ் சினிமாவில் 80,90களில் தனது நகைச்சுவை காட்சிகள் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. துவக்கத்தில் நாடகங்களில் நடித்து வந்தவர். பாரதிராஜா இயக்கிய பதினாறு வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் ஆகிய படங்கள் மூலம் ரசிகரக்ளிடம் பிரபலமானார்.

அதன்பின் பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. எனவே, மீண்டும் காமெடி வேடத்திற்கு திரும்பினர். செந்திலை தன்னுடன் வைத்துகொண்டு கவுண்டமணி செய்த காமெடி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம்.

இதையும் படிங்க: நல்ல செண்டிமெண்டான சீன்! யாரும் எதிர்பாராத கவுண்டரை அடித்து ரணகளம் செய்த கவுண்டமணி

90களில் கதாநாயகன் ரேஞ்சுக்கு அவரின் அந்தஸ்து உயர்ந்தது. எனவே, ஒரு நாளை இவ்வளவு லட்சம் என்றெல்லாம் சம்பளம் வாங்கினார். அதோடு, படத்தின் 2வது ஹீரோ போல வலம் வந்தார். படத்தில் ஹீரோ இருக்கும் எல்லா காட்சியிலும் கவுண்டமணியும் உடன் இருப்பார்.

சத்தியராஜ், பிரபு, கார்த்தி, ரஜினி, சரத்குமார் என அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பலரும் கவுண்டமணியின் கால்ஷீட்டுக்காக காத்து கிடந்தனர். அந்த அளவிற்கு படத்தின் வெற்றிக்கு கவுண்டமணி தேவைப்பட்டார். இப்போது ஒத்த ஓட்டு முத்தையா என்கிற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்திற்காக தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசி அசத்தி இருக்கிறார்.

இதையும் படிங்க: நான் ரஜினி கேரக்டரில் நடிக்கிறேன்.. அவரு காமெடி பண்ணட்டும்!.. கடுப்பான கவுண்டமணி!..

தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் ரீச் ஆகும் என படக்குழு சொல்லி வருகிறது. கவுண்டமணி பற்றி யாருக்கும் தெரியாத ஒரு தகவல் வெளியே கசிந்திருக்கிறது. கவுண்டமணி தனது கழுத்தில் எப்போதும் ஒரு செயினை அணிந்திருப்பார். படத்தில் நடிக்கும்போது அது அவரின் கழுத்தில் இருக்கும்.

இயக்குனர் கழட்ட சொன்னாலும் அவர் அதை கழட்டியதில்லை. ஆனால், அந்த செயினுக்கு இருக்கும் கதை, ரகசியம் என்ன என்பது இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இதுபற்றி கவுண்டமணியும் யாரிடமும் பேசியதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.