நான் ரஜினி கேரக்டரில் நடிக்கிறேன்.. அவரு காமெடி பண்ணட்டும்!.. கடுப்பான கவுண்டமணி!..

நாடகங்களில் பல வருடங்கள் நடித்துவிட்டு அப்படியே சினிமாவுக்கு வந்தவர்தான் கவுண்டமணி. கருப்பு வெள்ளை காலத்திலேயே சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். நிறைய காட்சிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பதினாறு வயதினிலே படத்தில்தான். அதன்பின் கிழக்கே போகும் ரயில் படத்திலும் இவருக்கு ஒரு நல்ல வேடம் கிடைத்தது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தவர் கே.பாக்கியராஜ்.

அதன்பின் மெல்ல மெல்ல மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கி பிஸி ஆனார் கவுண்டமணி. சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. கவுண்டமணியும் செந்திலும் இணைந்து செய்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.

இதையும் படிங்க: இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..

அதன்பின் பல திரைப்படங்களிலும் இருவரும் இணைந்து காமெடி செய்து ரசிகர்களை சிரிக்க வைத்தார்கள். ஒருகட்டத்தில் கவுண்டமணி காமெடிக்காகவே படங்கள் ஓட துவங்கியது. எனவே, தனது சம்பளத்தை ஏற்றினார் கவுண்டமணி. தமிழ் சினிமாவில் ஒரு நாளைக்கு இத்தனை லட்சம் என சம்பளம் வாங்கிய முதல் காமெடி நடிகர் கவுண்டமணிதான்.

goundamani

அதோடு, வெறும் காமெடியனாக மட்டும் வராமல் ஹீரோவோடு இணைந்து பல காட்சிகளிலும் வருவார். ஒருகட்டத்தில் 2வது கதாநாயகன் போலவே கவுண்டமணி மாறினார். எனவே, அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டது. அதேபோல், மனதில் நினைப்பதை அப்படியே பேசுபவர் கவுண்டமணி.

இதையும் படிங்க: அந்த விஷயத்துல அஜித்துக்கு முன்னோடி கவுண்டமணிதான்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!…

கமல், ரஜினி, பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என யாராக இருந்தாலும் சரி. கேப் கிடைத்தால் கலாய்த்துவிடுவார். அதனால், கமலே இவருடன் நடிக்க யோசிப்பார். ஒருகட்டத்தில் கவுண்டமணி ஒரு நாளைக்கு 2 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஏவிஎம் நிறுவனம் ரஜினியை வைத்து எஜமான் படத்தை துவங்கியது.

கவுண்டமணியை அழைத்து ‘15 நாட்கள் கால்ஷீட் கொடுங்கள். உங்களுக்கு 15 லட்சம் தருகிறோம்’ என கேட்டிருக்கிறார்கள். கவுண்டமணியோ ‘எனக்கு 50 லட்சம் வேண்டும்’ என சொல்ல ஏவிஎம் நிறுவனம் அதிர்ந்து போனது. ‘50 லட்சம் உங்களுக்கு அதிகம் இல்லையா?’ என கேட்க கோபமடைந்தார் கவுண்டமணி.

‘ஒன்னு பண்ணுங்க சார். நான் 15 லட்சம் வாங்கிக்கிறேன். ரஜினியோட கேரக்டர எனக்கு கொடுங்க.. என் கேரக்டரை அவருக்கு கொடுங்க.. அவரு காமெடி பண்ணட்டும்’ என சொன்னாராம் கவுண்டமணி. ஆடிப்போன ஏவிஎம் அவரை சமாதானப்படுத்தி அப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள்.

 

Related Articles

Next Story