இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..

by Akhilan |   ( Updated:2024-03-22 13:30:39  )
இப்பதான் உனக்கு அது தோனுச்சா?!.. படப்பிடிப்பில் விசித்ராவை பாடாய் படுத்திய கவுண்டமணி!..
X

Goundamani: காமெடி நடிகர் கவுண்டமணி ரொம்பவே குசும்பு பிடித்தவர். அவர் பெரிய பிரபலங்களை கூட பார்க்காமல் கலாய்த்துவிடுவாராம். அப்படி இருக்க நடிகை விசித்ராவிடமும் அவர் நடந்துக்கொண்ட விதம் குறித்து அவர் கொஞ்சம் காட்டமாகவே தெரிவித்து இருக்கிறார்.

கோலிவுட்டில் கவர்ச்சி நாயகியாக அறியப்பட்டவர் விசித்ரா. திடீரென சினிமாவில் இருந்து ப்ரேக் எடுத்தார். பின்னர் பல வருடம் கழித்து வந்து சீரியல்களில் நடித்தார். அவருக்கு விஜய் டிவியின் குக் வித் கோமாளி வாய்ப்பு கிடைத்தது. நல்ல புகழும் வாங்கிக்கொண்டார்.

இதையும் படிங்க: கடவுளை படமெடுக்க கசாப்புக்கடைக்காரனா? இளையராஜா பயோபிக்கை விமர்சித்த பிரபலம்!…

அதை உடனடியாக பயன்படுத்திக்கொள்ள விரும்பியவர் உடனே பிக்பாஸில் இணைந்தார். மூத்த போட்டியாளரான விசித்ரா கப்பை வெல்லும் வாய்ப்பு கூட இருப்பதாக தன் விளையாட்டை சரியாக கொண்டு சென்றார். ஆனால் சில காரணங்களால் கடைசி சில வாரத்தில் வெளியேறினார். அந்த நிகழ்ச்சியிலேயே தனக்கு படப்பிடிப்பில் பாலியல் தொல்லை இருந்ததாக கூறினார்.

அதுவும் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தன்னிடம் எல்லை மீறி நடந்துக்கொண்டதாகவும் அவர் சொல்லியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் நடிகர் கவுண்டமணி குறித்து விசித்ரா தற்போது ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அந்த பேட்டியில் இருந்து, நான் கவுண்டமணியுடன் நிறைய படங்களில் நடித்து இருக்கேன். அப்போதெல்லாம் நன்றாக இருந்தார்.

இதையும் படிங்க: திட்டுறத கொஞ்சம் நிறுத்துங்கப்பா!.. டைரக்டர் அவர் இல்லையாம்!. ராஜா பயோபிக் பரபர அப்டேட்!…

நான் பெரிய குடும்பம் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். அப்போ முதல் நாள் ஷூட்டிங்கில் என்னிடம் வந்த கே.எஸ்.ரவிகுமார் 'கவுண்டமணி சாரிடம் ஒரு வணக்கம் வச்சிட்டு வந்துருங்க' என அழைத்தார். 'நான் ஏன் வரணும்?' என்றேன். 'ஒரு வணக்கம் தானே வச்சிட்டு வந்துடு' என ரவிக்குமார் மல்லுக்கட்டி அழைத்து சென்றுவிடுகிறார்.

நான் கவுண்டமணி சாரை பார்த்து வணக்கம் வைத்தேன். என்னை ஒருமாதிரி பார்த்துட்டு ' இப்போதான் வணக்கம் வைக்க தோணுச்சோ' என்றார். அது எனக்கு பெரிய ஷாக்காகிவிட்டது. ஏன் அவர் அப்படி நடந்துக்கொண்டார் என்ற காரணம் கூட தனக்கு தெரியவில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story