Cinema News
செந்திலுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்த கவுண்டமணி.. அதன் சுவாரஸ்ய பின்னணி இதோ
Goundamani Senthil: தமிழ் சினிமாவில் ஏராளமான ஜோடிகளை பார்த்திருக்கிறோம். அது காதல் ஜோடி, கல்யாண ஜோடி என்றெல்லாம் இருக்கையில் கவுண்டமணி – செந்தில் ஜோடி என்பதுதான் உலகப்புகழ் பெற்றது. இவர்களின் இணை தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்.
இருவரும் சேர்ந்து ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்தாலும் இன்றும் கவுண்டமணி செந்தில் என்றால் நம் நினைவுக்கு வருவது கரகாட்டக்காரன் படத்தில் வரும் அந்த வாழைப்பழம் காமெடிதான். அந்த காமெடி மிகவும் பிரபலமானது.
இதையும் படிங்க: பாரதிராஜாவின் R செண்டிமெண்ட்! இவருடைய அறிமுகம் இல்லாமல் அந்த வரிசையில் வந்த ஒரே நடிகை
இருவரும் சேர்ந்து 450 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்கள். அடிவாங்கியே பிரபலமானவர் என்றால் அது செந்தில் மட்டும்தான். இருவரும் சேர்ந்து நடித்த படங்களில் கவுண்டமணியிடம் எப்போதும் அடிவாங்கும் கதாபாத்திரத்திலேயே செந்தில் நடித்திருப்பார். அதுதான் ரசிகர்களும் விரும்பினார்கள்.
இந்த நிலையில் செந்தில் எப்படி சினிமாவில் அறிமுகமானார் என்பது குறித்து இணையத்தில் ஒரு செய்தி வைரலானது. செந்திலை சினிமாவில் அறிமுகம் செய்ததே கவுண்டமணிதானாம். இருவரும் சினிமாவிற்கு வரும் போது ஏதோ ஒரு கடைகளில் தனித்தனியாக வேலைபார்த்திருக்கிறார்கள். அந்த நேரத்தில் செந்திலை அவ்வப்போது கவுண்டமணி பார்த்ததும் உண்டாம்.
இதையும் படிங்க: பிரச்னை உங்களை தேட வரலை பாக்கியா… நீங்களே தான் போய் சிக்கிடுறீங்க… மீண்டும் மீண்டுமா?
அந்த நேரத்தில் தியேட்டரில் ஸ்கிரீன் கட்டி நாடகங்களை போடுவார்களாம். அப்படி ஒரு வாய்ப்பு கவுண்டமணிக்கு வந்திருக்கிறது. போய் நடித்தும் கொடுத்தாராம். அதன் பிறகு அந்த நாடக முதலாளி ஸ்கிரீன் பிடிக்க யாராவது இருந்தால் வரச் சொல் என கவுண்டமணியிடம் கூறியிருக்கிறார். அப்போது கவுண்டமணியின் மனதில் தோன்றியவர் செந்தில்.
அப்போது செந்தில் ஒரு கடையில் 7 ரூபாய்க்கு வேலைப்பார்த்து வர நான் வர மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார். உடனே கவுண்டமணி உனக்கு நான் 10 ரூபாய் வாங்கித்தருகிறேன் என கூறி செந்தில் முதலாளியிடமும் அனுமதி பெற்று அங்கு அழைத்துப் போனாராம். ஒரு சமயம் நாடகம் நடந்து கொண்டிருக்கும் போது போலீஸ் கேரக்டரில் நடிப்பவர் அன்று வரவில்லையாம்.
இதையும் படிங்க: கல்யாணத்துக்கே கூப்பிடல!. ஆனா விஜயகாந்த் செய்த உதவி!.. நெகிழும் ஆர்.வி.உதயகுமார்…
என்ன செய்வது என யோசிக்கையில் ஸ்க்ரீனை பிடித்துக் கொண்டிருந்த செந்திலிடம் அந்த போலீஸ் ஆடையை கொடுத்து நடிக்க சொன்னாராம் கவுண்டமணி. அதிலிருந்தே இருவரும் நடிப்பதில் கவனம் செலுத்த அந்த இணை வெள்ளித்திரையிலும் ஜொலிக்க ஆரம்பித்தது.