நிம்மதியே இல்ல! இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல - வேதனையை வீடியோ மூலம் பகிர்ந்த ஜி.பி.முத்து

by Rohini |
muthu
X

muthu

GP Muthu: டிக்டாக் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜிபி முத்து. அதன் மூலம் கிடைத்த வரவேற்பால் குக்வித் கோமாளி, பிக்பாஸ் போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு மேலும் தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸில் இருக்கும் போது தன் குடும்பத்தை விட்டு இருக்க முடியவில்லை என்ற காரணத்தினால் வீட்டிலிருந்து வெளியேறினார் ஜி.பி,முத்து. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தார். இப்போது மீண்டும் ரீல்ஸ் வீடியோக்களை போட்டு மேலும் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: வீடு வாங்கியும் நிறைவேறாம போன ஆசை!.. ரஜினிக்குள்ள இன்னும் அந்த சோகம் இருக்காம்!…

இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் திடீரென தன் வேதனையை பகிர்ந்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் இப்போது குலசேகர பட்டினம் கடற்கரையில் இருப்பதாகவும் தனக்கு நிம்மதியே இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் கூட இருக்கிறவர்களை எக்காலத்துக்கும் நம்பிடாதீர்கள். அவங்க சொல்கிறார்கள் , இவங்க சொல்கிறார்கள் என யார் சொல்வதையும் கேட்காதீர்கள்.இதனால் நல்லவர்களின் மனக்கஷ்டத்திற்கு நாம் ஆளாகிவிடுகிறோம்.

இதையும் படிங்க: ‘ஜிகர்தண்டா 2’ பற்றி கமெண்ட் அடித்த ஹாலிவுட் நடிகர்!.. நம்ம பயலுக பார்த்த வேலைய பாருங்க!…

இன்று என் வாழ்க்கையில் ஒரு சிறிய நிகழ்வு நடண்ட்thu விட்டது. அதை நானே பேசி தீர்த்துக் கொண்டேன். இப்படி ஆகும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால் யாரையும் நம்பாமல் நானே அதை சரி செய்து கொண்டேன். அதனால் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே செய்துவிடுங்கள் என அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.

சமீபகாலமாக ஜிபி முத்துவை எந்தவொரு தொலைக்காட்சி தொடரிலோ அல்லது படங்களிலோ பார்க்க முடிவதில்லை. அதனால் மீண்டும் தான் ஆரம்பித்த வாழ்க்கைக்கே வந்து விட்டார் போலும். ரீல்ஸ் வீடியோக்களை போட்டு எப்பவும் போல் மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார் முத்து.

இதையும் படிங்க: முத்துவிடம் விஷயத்தை சொன்ன மீனா.. கடுப்பான அண்ணாமலை.. திருந்துங்க விஜயா..!

Next Story