More
Categories: Cinema News latest news

மியூஸிக்கும் வேணாம்.. நடிப்பும் வேணாம்! விஜய் லாரன்ஸ் வழியில் புதிய பயணத்தோடு ஹிப் பாப் ஆதி

Hip pop Aadhi: சினிமாவைப் பொறுத்த வரைக்கும் எதுவும் நிலையானது கிடையாது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. அதுவும் இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறுவதும் நடிகர்கள் வில்லன்களாக மாறுவதும் என காலத்திற்கு ஏற்ப சில மாற்றங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் பல இசையமைப்பாளர்கள் நடிகர்களாக மாறி இருப்பது நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஜீவி பிரகாஷ், விஜய் ஆண்டனி ,ஹிப் பாப் ஆதி போன்றவர்கள் இசையில் அவர்களது திறமையை காட்டி வருகிறார்கள். இருந்தாலும் நடிப்பிலும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். இதில் ஹிப் பாப் ஆதியும் ஜிவி பிரகாஷும் நடிப்பு ஒரு பக்கம் மியூசிக் ஒரு பக்கம் என கிடைக்கிற நேரத்தில் இரண்டையுமே செய்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: மகாராஜா படம் 10 சித்தாவுக்குச் சமமாம்..!  ரசிக்கறதுக்கு இவ்ளோ விஷயம் இருக்கா?

இந்த நிலையில் ஹிப் பாப் ஆதி சமீபத்தில் பேசிய போது அவருக்கு டாக்டரேட் பட்டம் கிடைத்திருப்பதாக கூறினார். அதுவும் முறையாக கல்வி கற்று பி எச் டி பட்டம் முடித்து இதை வாங்கியதாக கூறியிருக்கிறார். அதற்காக மூன்று வருஷம் சினிமாவில் பிரேக் எடுத்ததாகவும் கூறினார். இப்போது அந்தப் பட்டம் வாங்கி விட்டார்.

அடுத்த மூன்று வருடம் சினிமாவில் கவனம் செலுத்துவோம் என அரண்மனை 4, பி.டி.சார் போன்ற படங்களில் தனது இசைப் பணியை தொடங்கினாராம். அதன் பிறகு ஒரு மூன்று வருடம் தனது புதிய பயணத்தை தொடங்கப் போவதாகவும் கூறி இருக்கிறார் .அதாவது அவருடைய பெற்றோர்கள் ஆசிரியர்களாக இருந்து வருகிறார்களாம்.

இதையும் படிங்க: இனிமே எம்.ஜி.ஆர் அவ்வளவுதான்!.. கைவிட்ட சினிமா உலகம்!.. அப்புறம் நடந்தது இதுதான்!..

அதனால் தன் அப்பாவை போல தானும் அதே வழியில் போக இருப்பதாக ஆசைப்படுகிறேன் என கூறியிருக்கிறார் ஹிப் பாப் ஆதி. அதனால்தான் ஒரு கல்லூரிக்கு ஆசிரியராக போக வேண்டும் என்றால் முறையாக பி எச் டி பட்டம் பெற்று டாக்டரேட் வாங்கிய பிறகு தான் போக முடியும் .அங்கு போய் மாணவர்களுக்கு முறையாக சொல்லிக் கொடுக்க முடியும்.

அதன் காரணமாகவே தான் நான் இதை எடுத்து படித்து இன்று இந்த பட்டத்தை வாங்கி இருக்கிறேன். அடுத்த மூன்று வருடம் என் அப்பா வழியில் நான் செல்ல விரும்புகிறேன் என ஹிப்பாப் ஆதி கூறி இருக்கிறார். இப்படி சினிமாவில் இருக்கும் சில பிரபலங்கள் சினிமாவிற்குப் பிறகு தங்களுக்கு என ஒரு தொழிலை நிரந்தரமாக வேண்டும் என எண்ணுகிறார்கள்.

இதையும் படிங்க: அஜித்துக்கு எப்படி மங்காத்தா படமோ அதே போல விஜய் சேதுபதிக்கு மகாராஜா!.. விஜய் நிலைமை தான் மோசம்!..

அது மட்டும் அல்லாமல் விஜய் சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலுக்கு செல்கிறார். இன்னொரு பக்கம் லாரன்ஸ் சினிமா ஒரு பக்கம் தனது சேவை ஒரு பக்கம் என இரண்டையும் சமமாக கவனித்து வருகிறார். இதற்கிடையில் ஹிப் பாப் ஆதியும் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.

Published by
Rohini

Recent Posts