Categories: Cinema News latest news

காதலியை அறிமுகம் செய்து வைத்த விக்ரம் பட நடிகர்.. பார்த்துவிட்டு ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?

நடிகர் ஜாஃபர் சாதிக் பாவக் கதைகள், வெந்து தணிந்தது காடு, விக்ரம், ஜெயிலர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சில நாட்களிலேயே தனது நடிப்பின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த இவர், குறுகிய காலத்திலேயே கமல்ஹாசனோடும், ரஜினிகாந்த்தோடும் இணைந்து நடித்துவிட்டார்.

இவர் அடுத்தடுத்து தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளத்திலும், இந்தியிலும் நடித்து வருகிறார். அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜவான் திரைப்படத்திலுமு் ஜாஃபர் சாதிக் நடித்துள்ளார்.

இதையும் படிங்க- ரஜினியின் நோக்கமே இதுதான்! ஜெய்லர் படத்தில் இத்தனை மாற்றம் செய்ததன் ஒரே பின்னணி! அப்டி போடு!

உயரம் சற்று குறைவாக இருந்தாலும், தனது மிரட்டலான நடிப்பின் மூலமும், கம்பீர குரிலின் மூலமும் விக்ரம் படத்தில் நடுங்க வைத்திருப்பார். ஜெயிலர் படத்தில் சற்று காமெடியான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் இவர் ஜெயிலர் படத்தில் நடித்தது பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

படப்பிடிப்பின் போது, ஒருநாள் நான் என் காதலியை அழைத்து சென்றிருந்தேன். ஏற்கனவே பல முறை ரஜினிகாந்த் என்னிடம் விரைவில் திருமணம் செய்துகொள்ளுமாறு கூறிவந்தார். இந்நிலையில் காதலியை அவரிடம் கூட்டிச்சென்று அறிமுகப்படுத்தினேன்.

அவர் மிக எளிமையாக, சகஜமாக பேசினார். அதை பார்த்து என் காதலி வியந்துவிட்டார். மேலும் என்னை பற்றி கூறுகையில், ஜாஃபர் பக்கா ஜென்டில்மேன் என்று ரஜினிகாந்த் கூறினார். அவர் இருக்கும் உயரத்திற்கு அவர் இப்படி எளிமையாக நடந்துகொள்வது மிக பெரிய விஷயம். என் வாழ்க்கையில் நான் இதை மறக்கவே மாட்டேன் என்று ஜாஃபர் சாதிக் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க- நடிகருடன் காதல், கல்யாணம் , அபார்ஷன்! பல தடைகளை தாண்டி ‘ஜெய்லர்’ படத்தில் கெத்து காட்டிய நாயகி

Published by
prabhanjani