ரஜினி, விஜய் கூட நடிச்சு மொக்க வாங்கியதுதான் மிச்சம்! லக்கி ஸ்டார் அஜித்தான்.. வருத்தத்தில் வில்லன் நடிகர்

by Rohini |
ajith
X

ajith

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி இவர்களுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஆளுமைகளாக இருப்பவர்கள் நடிகர் ரஜினி மற்றும் கமல். ரஜினி, கமல் இவர்களை பொருத்தவரைக்கும் இன்று ஒரு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் மன்னராக இருப்பவர் ரஜினி மட்டுமே. அவருடைய படங்களுக்கு நல்ல ஒரு ஓபனிங் இருந்து வருகிறது. அவருக்கு இணையான புகழையும் அந்தஸ்தையும் பெற்ற நடிகராக இருப்பவர் விஜய்.

அதனாலயே கொஞ்ச நாள்களாக ரஜினிக்கும் விஜய்க்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. அதை ரஜினி தான் முடித்து வைத்தார். லால் சலாம் பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது என் கண் முன் வளர்ந்த பையன் விஜய். அவருடன் நான் போட்டி போடுகிறேன் என்று சொல்லும் போது ரசிகர்களை நினைத்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என்று ரஜினி கூறியிருந்தார். அதிலிருந்தே இருவருக்கும் ஆன அந்த போட்டி குறித்த பேச்சுகள் மறைந்து போயின.

இதையும் படிங்க:என்னை எல்லா படத்திலும் அழுமூஞ்சியாவே காட்றாங்க!.. நீதான் மாத்தணும்!. இயக்குனரிடம் கேட்ட சிவாஜி!..

இதற்கிடையில் விஜய் அரசியல் பக்கம் செல்ல இருப்பதால் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வரை அவர் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்த பிறகு முழுவதுமாக அரசியலில் கவனம் செலுத்த இருக்கிறார். இந்த நிலையில் தமிழில் பல படங்களில் பிரபல வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் ஜெகபதி பாபு. தொடர்ச்சியாக ரஜினி, விஜய், அஜித் என இவர்களுடன் ஏராளமான படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.

jega

jega

இந்த நிலையில் தான் அவரின் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதாவது விஜய், ரஜினியை பொறுத்தவரைக்கும் அஜித்தான் லக்கி ஸ்டார் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் தமிழில் ரஜினி, விஜய், அஜித் படங்களில் மட்டுமே நடித்த ஜெகதிபாபு ரஜினியுடன் நடித்த இரண்டு படங்களுமே ப்ளாப் ஆகிவிட்டதாம். அதே போல் விஜயுடன் நடித்த படங்களும் ப்ளாப் ஆகிவிட்டதாம். ஆனால் அஜித்துடன் ஒரே ஒரு படத்தில்தான் நடித்தாராம். அதுதான் விஸ்வாசம் என பதிவிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: ரீ ரிலீஸில் அள்ளிய வசூல்.. ஆனாலும் யாரையும் சந்திக்காத கில்லி பட இயக்குனர்!.. இதுதான் காரணமா?!..

Next Story