அஜித்தால் வாங்கிக் கட்டிய ஜெய்! மேடையில் பொளந்து கட்டிய தயாரிப்பாளர் - இதெல்லாம் தேவையா?
Actor Ajith: இன்றைய இளம் தலைமுறை நடிகர்கள் பெரும்பாலும் ரஜினி, கமலுக்கு அடுத்த படியாக விஜய், அஜித்தை ரோல்மாடலாக வைத்தேதான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கின்றனர். ரசிகர்களை தாண்டி விஜய், அஜித்தை பிடித்த ஏராளமான பிரபலங்கள் உள்ளனர்.
அந்த வகையில் நடிகர் ஜெய் அஜித்தின் தீவிர ரசிகர். அப்படி தன்னை ரோல்மாடலாக சில பேர் இருக்கும் பட்சத்தில் தன்னால் அவர்களும் ஒரு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அஜித்தோ சமீபகாலமாக அனைவருடைய விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
இதையும் படிங்க: படம் ரிலீஸே ஆயிடுச்சி!.. இன்னும் போனி ஆகல!. அப்செட்டில் ரஜினி!.. இதெல்லாம் பாவம் மை லார்ட்…
இதைப் பற்றி வலைப்பேச்சு சக்திவேல் மிகவும் காரசாரமாக கூறியிருக்கிறார். அதாவது ‘அவருடைய சொந்த விஷயம் என்றால் அதை பற்றி ப்ரோமோஷன் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கும் அஜித் ஏன் படங்களின் ப்ரோமோஷனில் மட்டும் கலந்து கொள்வதில்லை’ என்ற கேள்வியை சக்திவேல் எழுப்பியிருக்கிறார்.
அதுமட்டுமில்லாமல் ‘ஒரு சாதாரண மனிதராக இருந்தால் அவரை யாரும் எந்த கேள்வியும் கேட்கமுடியாது. ஆனால் பொதுவாழ்க்கைக்குள் வந்து விட்டு இப்படி ஒரு சுயநலவாதியாக அஜித் இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது’ என்றும் கூறினார்.
இதையும் படிங்க: ஜெயம் ரவியோட இந்த படமாவது தியேட்டர்ல பார்க்குற மாதிரி இருக்குதா?.. சைரன் விமர்சனம் இதோ!..
‘ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் இன்று வரை அவருக்கு கட் அவுட் செய்து பாலாபிஷேகம் செய்யும் ரசிகர்களை நாம் பார்க்க முடிகின்றது. அந்தளவுக்கு அஜித் மீது ரசிகர்கள் ஏராளமான அன்பு வைத்திருக்கின்றனர். முன்பு இருந்த அஜித்தே வேறு. சகஜமாக பேசக்கூடியவர். பத்திரிக்கையாளர்களிடம் நட்பாக பழக கூடியவர். எப்போது அவர் முகத்தில் சிர்ப்பை பார்ககலாம்.
ஆனால் இப்போது அஜித் முழுவதுமாக மாறியிருக்கிறார். அஜித்தை பின்பற்றுவோர் ஏராளம். அப்படி இருக்கும் போது அஜித் இந்த மாதிரியெல்லாம் இருந்தால் அவரை பின்பற்றும் ரசிகர்களாகட்டும் சினிமாவில் இருக்கும் பிரபலங்களே ஆகட்டும் அவர்களும் இதே அஜித் வழியைத்தான் பின்பற்றுவார்கள். அந்த வகையில் அஜித் மாதிரியே ஜெய்யும் பட ப்ரோமோஷனில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.
இதையும் படிங்க: என்னது விஜயகாந்த் உதவி செய்யலயா? நம்புற மாதிரி சொல்லுங்க – அஜித் வராததற்கு இதுதான் காரணமா
அப்போது ஒரு பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜெய்யை வெளுத்து வாங்கிவிட்டார். அஜித் அப்படி இருக்கிறார் என்றால் நீங்களும் அப்படி இருக்க வேண்டுமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை கேட்டு ஜெய்யை ஒரு வழி பண்ணிவிட்டார். அதிலிருந்தே இப்போது ப்ரோமோஷன்களில் கலந்து கொள்கிறார்’ ஜெய் என சக்திவேல் கூறினார்.