மகன் மனைவியுடன் ஸ்கூட்டரில் டிரிபிள்ஸ் போன எஸ்.ஏ.சி!.. உடனே கார் வாங்கி கொடுத்த நடிகர்...
80களில் பல திரைப்படங்களையும் இயக்கியவர் எஸ்.ஏ.சந்திரசேகர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் இதுவரை 70 திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். இவர் முதலில் இயக்கிய திரைப்படம் பச்சைக் குழந்தை. இந்த படம் 1978ம் வருடம் வெளியானது.
அடுத்து விஜயகாந்தை ஹீரோவாக போட்டு அவர் இயக்கிய படம்தான் சட்டம் ஒரு இருட்டறை. இந்த படத்தின் வெற்றிதான் விஜயகாந்தை கவனிக்கத்தக்க ஒரு ஹீரோவாக மாற்றியது. அதன்பின் எஸ்.ஏ.சி பல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார். விஜயகாந்தை வைத்து அதிக படங்களை இயக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: கதையே தெரியாமத்தான் இத்தனை நாள் சுத்திட்டு இருக்கியா!.. பிரபல ஹீரோவை பங்கமா கலாய்த்த விஜய்!..
இவரிடம் உதவியாளராக இருந்தவர்தான் ஷங்கர். இப்போது பிரம்மாண்ட இயக்குனராக சினிமா உலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 80களில் புரட்சி இயக்குனர் என்கிற பட்டமும் எஸ்.ஏ.சிக்கு கிடைத்தது. ஏனெனில், தனது படங்களில் புரட்சிகரமான கருத்துக்களை பேசுவார். தனது மகன் விஜயை நாளைய தீர்ப்பு என்கிற படம் முலம் அறிகம் செய்து வைத்தார்.
இப்போது விஜய் சினிமாவில் உச்ச நடிகராக மாறி இருக்கிறார். ஒருகட்டத்தில் மகனின் கால்ஷீட் விவகாரங்களை கவனித்துகொண்டிருந்தார். ஆனால், விஜய்க்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விஜயை சினிமாவில் நிலைக்க செய்வதற்காக தனது சொத்துக்களை விற்றவர் எஸ்.ஏ.சி.
இப்போது விஜயிடம் விலை உயர்ந்த கார்கள் இருக்கிறது. ஆனால், எஸ்.ஏ.சி-யிடம் முதலில் கார் எப்படி வந்தது என்பது பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். ஒருநாள் சென்னை கோடம்பாக்கம் பாலத்தின் மீது தனது ஸ்கூட்டரில் மனைவி ஷோபா மற்றும் விஜயுடன் போய்க்கொண்டிருந்தார் எஸ்.ஏ.சி.
இதையும் படிங்க: அத மட்டும் நான் எப்பவுமே செய்ய மாட்டேன்!.. சிவகார்த்திகேயனுக்கு வாக்கு கொடுத்த விஜய்!..
அப்போது அந்த பக்கம் காரில் போன ஒரு நட்சத்திர நடிகர் அதை பார்த்துவிட்டார். அதன்பின் ஸ்டுடியோவில் எஸ்.ஏ.சியை பார்த்த அந்த நடிகர் ‘நீங்கள் ஸ்கூட்டரில் டிரிபிள்ஸ் போனதை பார்த்தேன். நான் உங்களுக்கு ஒரு கார் வாங்கி தருகிறேன். இனிமேல் அதில் செல்லுங்கள்’ என சொன்னார். ஆனால், எஸ்.ஏ.சி ‘இல்லை சார் வேண்டாம்’ மறுத்திருக்கிறார்.
‘நான் உங்களுக்கு இலவசமாக வாங்கி தரவில்லை. உங்களால் முடியும் போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த பணத்தை கொடுங்கள்’ என சொல்லி ஒரு சிவப்பு நிற பியட் காரை அந்த நடிகர் வாங்கி கொடுத்தார். அதுதான் எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிய முதல் கார் ஆகும். விஜய் அமர்ந்து சென்ற முதல் கார் அதுதான். அந்த காரை வாங்கி தந்த அந்த நடிகர் ஜெய்சங்கர்.