More
Categories: Cinema History Cinema News latest news

சிவாஜி முதல் அஜீத் வரை முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்த குணச்சித்திர நடிகர்

யதார்த்தமாக நடிக்கக்கூடிய திறமையான ஒரு நடிகர்களில் ஒருவர் ஜெய்கணேஷ். தமிழ்சினிமாவில் இவரது பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியுள்ளன.

ரொம்பவும் அலட்டிக்கொள்ளாமல் கொடுத்த பாத்திரத்தைக் கனக்கச்சிதமாக நடித்துக் கொடுப்பார்.

Advertising
Advertising

Actor Jaiganesh

தாய்மார்களின் மத்தியில் பேராதரவைப் பெற்றவர். இவர் நடித்த படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் எதுவும் இருக்காது. இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் இமயம் கே.பாலசந்தர். அவள் ஒரு தொடர்கதை படம் தான் இவரது முதல் படம்.

இயக்குனர் இமயத்தின் அறிமுகம். ஆமாம்.

இவர் நடித்த படங்களில் சுவாசிரசியமிக்க சில படங்களை இப்போது பார்க்கலாம்.

அவள் ஒரு தொடர்கதை

1974ல் வெளியான கே.பாலசந்தரின் படம். சுஜாதா, ஜெய்கணேஷ், கமல், ஸ்ரீபிரியா, படாபட் ஜெயலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர். வெள்ளி விழா கண்ட வெற்றிப்படம். முதல் படத்திலேயே ஜெய்கணேஷ் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தப்படம் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நேரும் இன்னல்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட். அடி என்னடி உலகம், கடவுள் அமைத்து வைத்த மேடை, கண்ணில் என்ன, தெய்வம் தந்த வீடு, ஆடுமடி தொட்டில் ஆகிய பாடல்கள் உள்ளன.

சின்னவீடு

jaiganesh

1985ல் கே.பாக்யராஜ் நடித்து இயக்கிய படம். நடிகை கல்பனாவுக்கு இதுதான் அறிமுக படம். அற்புதமாக நடித்து இருந்தார். அனு, கோவை சரளா, ஜெய்கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

கல்பனாவின் தந்தையாக ஜெய்கணேஷ் நடித்துள்ளார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். அட மச்சமுள்ள, சிட்டுக்குருவி, ஜாக்கிரத ஜாக்கிரத, ஜாமம் ஆகிப்போச்சு, வா வா சாமி, வெள்ளை மனம் உள்ள மச்சான் ஆகிய பாடல்கள் உள்ளன.

அதிசயப்பிறவி

எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 1990ல் வெளியான படம். ரஜினிகாந்த், கனகா, நாகேஷ், ஜெய்கணேஷ், சோ, கிங்காங் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர் ரகங்கள்.

இந்தப்படத்தில் ரஜினிகாந்த் முற்றிலும் மாறுபட்ட இரு வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருப்பார். அன்னக்கிளியே, இதழ்சிந்தும், பாட்டுக்கு பாட்டு, சிங்காரி பியாரி, உன்ன பார்த்த நேரம், தான தனம் ஆகிய பாடல்கள் உள்ளன.

உள்ளத்தை அள்ளித்தா

1996ல் ஜெய்கணேஷ்க்கு பெரிய அளவில் ஹிட் கொடுத்த படம் உள்ளத்தை அள்ளித் தா. சுந்தர்.சியின் இயக்கத்தில் கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிண்ணன், ஜெய்கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

சிற்பியின் இசையில் பாடல்கள் முத்துக்கள். அழகிய லைலா, சிட்டு குருவி, மாமா நீ மாமா, அனார்கலி, ஐ லவ் யூ ஆகிய பாடல்கள் உள்ளன.

உன்னைத்தேடி

Jai Ganesh

1999ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. அஜீத்குமார், மாளவிகா, ஸ்ரீவித்யா, விவேக், வையாபுரி, கரண், வாசு, ராஜீவ், ராதாகிருஷ்ணன், மனோரமா, சிவக்குமார், ஜெய்கணேஷ், வினுச்சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் தெவிட்டாத இசையில் பாடல்கள் அனைத்தும் சக்கை போடு போட்டன.

காற்றாக வருவாயா, மாளவிகா, நாளை காலை நேரில், நீதானா நீதானா, போறாளே போறாளே, ஒயிலா ஒயிலா ஆகிய பாடல்கள் உள்ளன. ரஜினிகாந்த் உடன் ஜோடியாக நடித்து இருந்தார். ஒரு தீங்கு இழைத்தேன் என்று சொல்லும் ஜெயலலிதா தான் படத்தின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

Published by
sankaran v

Recent Posts