Connect with us
jayamravi

Cinema News

எந்திருக்கவே முடியலயாம்.. அவனுக்கு ஏழு பொண்டாட்டி கேட்குதாம்! சிரிப்பா போச்சு ஜெயம் ரவியின் நிலைமை

Jayam Ravi: இன்று தமிழ் சினிமாவில் ஒரு சார்மிங் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி. ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமாகி ஆரம்பத்தில் பெண் ரசிகைகளை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்த நடிகராக திகழ்ந்து வந்தார்.

தொடர்ந்து பல நல்ல நல்ல படங்களை கொடுத்து வந்த ஜெயம் ரவி சமீபகாலமாக அவரின் படங்கள் சரியான வெற்றியை பெறவில்லை. ஆனால் பொன்னியின் செல்வன் படம்தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: விஜய் கொடுத்த வாழ்க்கை… வளர வேண்டிய கலைஞர் கேரியரில் விளையாடிய வடிவேலு..! இதெல்லாம் பாவம்…

அதுவும் இந்த படத்தில் அவர் ஹீரோ இல்லை. ஒரு மல்டி ஸ்டார் படமாக அமைந்ததால் ஜெயம் ரவியால் மட்டும் கிடைத்த வெற்றி என கருத்தில் கொள்ள முடியாது. கடைசியாக அவர் ஹீரோவாக நடித்த இறைவன் திரைப்படம் சரியான ப்ளாப் ஆன படமாக மாறியது.

பொன்னியின் செல்வனுக்கு முன்பும் சரி அந்தப் படத்திற்கு பிறகும் சரி அவர் ஹீரோவாக நடித்த எந்தப் படங்களும் ஓடவில்லை. இந்த நிலையில் கமல் மற்றும் மணிரத்தினம்  கூட்டணியில் தயாராகப் போகும் திரைப்படமான தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதையும் படிங்க: நான் நடிச்சிருந்தா கூட இப்படி ஒரு நடிப்பை கொடுத்திருக்க மாட்டேன்! நெப்போலியனை பார்த்து கமல் சொன்ன படம்

இந்த தகவல் கிடைத்ததில் இருந்து இனிமே ஜெயம் ரவி இல்லை. அவர் பெயர் ஜாயிண்ட் ரவி என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் மல்டி ஸ்டாரர் படத்தில் நடித்தாலாவது அந்தப் படம் ஓடுகிறது. அதனாலேயே அந்தப் பெயர்களை வைத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஜெயம் ரவி அவர் கைவசம் 9 படங்களை வைத்திருக்கிறாராம். 2025 ஆம் ஆண்டு ஜூன் வரைக்கும் அவர் மிகவும் பிஸியாம். எந்த படங்களிலும் கமிட் ஆவப் போவதில்லையாம். இதை அறிந்த ரசிகர்கள் 9 படங்களை வச்சிருந்தால் மட்டும் போதாது. அதை வெற்றிபெற வைக்க வேண்டும். அதனால் கதையை கேட்டு பின் நடியுங்கள் ஜெயம் ரவி என்று அறிவுரையும் கொடுத்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: தலீவரே இப்படியா வகையா சிக்குவீங்க… தக் லைஃப் படத்தின் போஸ்டரே காப்பி தான்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்

google news
Continue Reading

More in Cinema News

To Top