கால்ஷீட் கேட்டு வந்த இயக்குனர்.. தலையில் தட்டி அனுப்பிய ஜெயம் ரவி! படமோ சூப்பர் ஹிட்
Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு சார்மிங் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. ஒரு பக்கம் அப்பா எடிட்டர். இன்னொரு பக்கம் அண்ணன் ஒரு சிறந்த இயக்குனர். அதனால் சினிமாவை நன்கு அறிந்த ஒரு குடும்பத்தில் இருந்து வந்ததனால் நடிப்பு என்பது ஜெயம் ரவிக்கு எளிதாக மாறிவிட்டது.
முதல் படத்திலேயே தனது அபார நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதுவும் முதல் படமே தன் அண்ணனின் இயக்கத்தில் அமைந்ததே கூடுதல் சிறப்பு. ஜெயம் படத்திற்கு பிறகு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலித்து வந்தார்.
இதையும் படிங்க: அவர் இல்லனா நான் இல்ல!.. வாலிக்கு தக்க சமயத்தில் உதவிய பாடகர் பற்றி தெரியுமா?…
பல நல்ல நல்ல படங்களை கொடுப்பதன் மூலமும் நடனத்தில் சிறப்பான திறமையை காட்டுவதன் மூலமும் இவருக்கு என தனி ரசிகர் பட்டாளமே உருவாகினார்கள். இந்த நிலையில் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சைரன். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யவில்லை. இப்போது ஜீனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜெயம் ரவியின் ஒரு பேட்டி வைரலாகி வருகின்றது. அதாவது ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல் என்ற பெயரில் நடித்துவிடுகிறேன். ஆனால் அது எனக்கு சுத்தமாக செட்டாகவில்லை. அதனால் இனிமேல் கெஸ்ட் ரோலில் நடிக்க கூடாது என முடிவெடுத்திருக்கிறேன் என கூறினார்.
இதையும் படிங்க: அந்த வேலை கிடைக்காததால் நடிகரான ஏ.வி.எம் ராஜன்… கடைசியில் என்ன ஆனார் தெரியுமா?
அதுமட்டுமில்லாமல் ஜெயம் ரவிக்கு நண்பரும் இயக்குனருமான ஒருவர் திடீரென ஒரு படத்தில் நடிக்க கால்ஷீட் கேட்டு வந்தாராம். ஆனால் முதலில் அந்தப் படத்தில் நடிக்க இருந்தது ஒரு பெரிய நடிகராம். அவர் அந்தப் படத்தில் இருந்து விலகி விட்டதால் ஜெயம் ரவியை வைத்து அதே கதையை பண்ணி விடலாம் என அந்த இயக்குனர் வந்திருக்கிறார்.
வேறு எதாவது காரணம் என்றாலும் நான் நடித்திருப்பேன். ஆனால் அந்த நடிகருக்கும் இந்த இயக்குனருக்கும் ஈகோ பிரச்சினையாம். அதனால் அந்த நடிகர் முடியாது என சொல்லிவிட்டாராம். இந்த காரணத்தைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உடனே அந்த இயக்குனரின் தலையில் தட்டி போய் அந்த நடிகருடன் சமாதானம் ஆகி அந்தப் படத்தை எடு என சொல்லி அனுப்பி வைத்தாராம் ஜெயம் ரவி. பிறகு அந்தப் படம் சூப்பர் ஹிட்டாம்.
இதையும் படிங்க: ஆண்ட்டி டூ பியூட்டி!… வைரலாகும் கல்யாணி பிரியதர்ஷனின் பழைய புகைப்படம்.. பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க…