டைரக்‌ஷனில் களமிறங்க ரெடி! தனது முதல் ஹீரோவை பகிரங்கமாக அறிமுகப்படுத்திய ஜெயம் ரவி - இவரா?

Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஒரு சார்மிங் நடிகராக பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகராக வலம் வரும் ஜெயம் ரவியை நமது வீட்டில் இருக்கும் ஒருவரை போலத்தான் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

அந்தளவுக்கு ரசிகர்களிடமும் சரி, வெளியில் பழகும் விதத்தை பார்க்கும் போதும் சரி நம் வீட்டு பிள்ளை போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் இறைவன்.

இதையும் படிங்க: கூல் சுரேஷ் பிரச்சனை பண்ண தொகுப்பாளினிக்கிட்ட விஜய் பட இயக்குனர் பண்ண அலப்பறையை பார்த்தீங்களா!..

இந்தப் படம் வருகிற 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்திலும் ஜெயம் ரவி ஒரு சைக்கோ போலீஸாகத்தான் வருகிறாராம். இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய ஜெயம் ரவி விஜய் சேதுபதியை பற்றி பல விஷயங்களை பகிர்ந்தார். அதாவது விஜய் சேதுபதி பார்த்த முதல் ஹீரோ ஜெயம் ரவிதானாம்.இதை விஜய்சேதுபதியே ஜெயம் ரவியிடம் கூறினாராம்.

இதையும் படிங்க: நேஷ்னல் கிரஷ்னா சும்மாவா!.. ஷாருக்கானையே வளைத்துப் போட்ட ராஷ்மிகா மந்தனா.. செம ஸ்பீடு!..

அதே போல் ஜெயம் ரவி டைரக்‌ஷன் பண்ணனும்னு நினைச்ச முதல் ஹீரோ விஜய் சேதுபதிதானாம். ஏற்கனவே ஜெயம் ரவி டைரக்‌ஷன் பக்கமும் தனது விருப்பத்தை ஒரு பேட்டியில் அறிவித்திருந்தார்.

இன்று யாரை வைத்து இயக்கப் போகிறேன் என்பதையும் பகிரங்கமாக கூறியிருக்கிறார். மேலும் ஒரு நடிகருக்கு உண்டான எல்லா தகுதியும் இருக்கிற ஒரு நபர்தான் விஜய்சேதுபதி என்றும் அவரை வைத்து இயக்கினால் என் வேலை மிக எளிதாக அமைந்து விடும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அப்பா, அம்மாவுக்கு வீடு கட்ட நினைச்சது தப்பா!.. பாபி சிம்ஹாவை ரியல் அழுகினி குமாரா மாத்திட்டாங்களே!..

ஏனெனில் விஜய் சேதுபதியின் நடிப்பில் எந்தவொரு குறையும் கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமில்லாமல் அவர் நன்றாக நடித்தால் அதனால் வரும் பேரும் புகழும் தனக்குத்தான் என்றும் ஜெயம் ரவி கூறினார். அதனால் நானும் நீங்களும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கிறது.ஆனால் உங்களை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என அந்த மேடையிலேயே ஜெயம் ரவி விஜய் சேதுபதியை பார்த்து கூறினார்.

 

Related Articles

Next Story