நேஷ்னல் கிரஷ்னா சும்மாவா!.. ஷாருக்கானையே வளைத்துப் போட்ட ராஷ்மிகா மந்தனா.. செம ஸ்பீடு!..

Rashmika Mandanna - கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா விஜய் தேவரகொண்டா உடன் நடித்த தெலுங்கு திரைப்படமான கீதகோவிந்தம் அவருக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

மகேஷ் பாபுக்கு ஜோடியாக சரிலேறு நீக்கெவ்வரு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் வெளியான புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார் ராஷ்மிகா மந்தனா.

இதையும் படிங்க: அப்பா, அம்மாவுக்கு வீடு கட்ட நினைச்சது தப்பா!.. பாபி சிம்ஹாவை ரியல் அழுகினி குமாரா மாத்திட்டாங்களா?..

தமிழில் நடிகர் கார்த்தியின் சுல்தான் படத்தில் அறிமுகமான ராஷ்மிகா வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். ரஞ்சிதமே, ஜிமிக்கி பொண்ணு உள்ளிட்ட பாடல்களுக்கு படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டிருந்தார் ராஷ்மிகா மந்தனா.

பாலிவுட்டில் அமிதாப்பச்சனின் குட் பை படத்தில் நடித்த ராஷ்மிகா அடுத்ததாக ரன்வீர் கபூர் நடிப்பில் உருவாக்கி வரும் அனிமல் படத்தில் கீதாஞ்சலி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: என்னை நடிகை மட்டும்தான்னு நினைச்சீங்களா?!.. அசோக் செல்வன் மனைவி பற்றிய ஆச்சர்ய தகவல்!…

ஜவான் படத்தின் வெற்றியை கொண்டாடி வரும் ஷாருக்கானுடன் இணைந்து தற்போது ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. அந்த விளம்பர வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ராஷ்மிகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டன்கி படத்திற்கு பிறகு, ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ராஷ்மிகா தான் ஜோடி போல தெரிகிறதே என்றும், ரெண்டு பேரும் விளம்பர படத்திலேயே க்யூட் ஜோடிகளாக இருக்கீங்க என நெட்டிசன்கள் ஹார்ட்டின் மழைகளை பொழிந்து வருகின்றனர்.

அனிமல், புஷ்பா 2 என அடுத்தடுத்து நடிகை ராஷ்மிகாவுக்கு பெரிய படங்கள் கைவசம் உள்ள நிலையில், தற்போது ஷாருக்கான் உடன் ஸ்வீட் விளம்பரத்தில் நடித்துள்ளார். ஷாருக்கான் குலோப் ஜாமுனையும் ராஷ்மிகா ரசகுல்லாவையும் சாப்பிடும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

 

Related Articles

Next Story