Connect with us
keerthi pandian

Cinema News

என்னை நடிகை மட்டும்தான்னு நினைச்சீங்களா?!.. அசோக் செல்வன் மனைவி பற்றிய ஆச்சர்ய தகவல்!…

keerthi pandian: 80,90களில் ஊமை விழிகள், இணைந்த கைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகர் அருண் பாண்டியன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் இவர். விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமானவர்.

இவர் இயக்கி நடித்த 100வது படமான தேவன் படத்திலும் விஜயகாந்த், கார்த்திக் என எல்லோரும் நடித்திருந்தனர். விஜயகாந்த் கட்சி துவங்கியது போல் அதில் தன்னை இணைத்துக்கொண்டு எம்.எல்.ஏ-வாகவும் மாறினார். அதன்பின் தேமுதிகவிலிருந்து விலகி அதிமுக ஆதரவாக செயல்பட்டார். அதன்பின் அரசியலிலிருந்தே விலகிவிட்டார்.

இதையும் படிங்க: அந்த நேரத்தில் கார்த்திக்கு உதவிய நடிகர்!.. நன்றி மறக்காமல் நவரச நாயகன் செய்த அந்த சம்பவம்!…

இப்போதும் சினிமாவிலும் நடிப்பதில்லை. ஆனால், இவர் ஒரு தொழிலதிபர். இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. அங்கு இவருக்கு பல ஏக்கர் விவசாய நிலம் இருக்கிறது. அதேபோல், திரைப்படங்களை தயாரித்த ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இவரும் ஒரு பங்குதாரராக இருந்தவர். இவரின் மகள் கீர்த்தியைத்தான் நடிகை அசோக் செல்வன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

கீர்த்தி பாண்டியன் தும்பா, அன்பிற்கினியாள், சவாலே சமாளி, கொஞ்சம் பேசினால் என்ன ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். அசோக் செல்வன் இவரை திருமணம் செய்த போது பலரும் நாகரீகம் இல்லாமல் கீர்த்தியை அவரின் நிறத்தை காட்டி சமூகவலைத்தளங்களில் ட்ரோல் செய்தனர்.

இதையும் படிங்க: ‘ஜெயிலர்’லாம் அப்புறம்.. முதல்ல ஜவானை ஜெயிக்கணும்!. இது என்னடா லியோவுக்கு வந்த சோதனை!…

ஆனால், இதுக்கெல்லாம் இருவரும் பதில் சொல்லிக்கொண்டிருக்கவில்லை. திருநெல்வேலியில் மிகவும் எளிமையாக பசுமை திருமணம் செய்து கொண்ட இந்த காதல் ஜோடி சமீபத்தில் சென்னையில் திரையுலகினருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்தினார். இதில் பலரும் கலந்துகொண்டனர்.

கீர்த்தியை நடிகை என்றுதான் சிலருக்கு தெரியும். ஆனால், அவர் நல்ல விவசாயி என்பது பலருக்கும் தெரியாது. திருநெல்வேலியில் உள்ள சொந்த நிலத்தில் அவரே ட்ராக்ட்டர் ஒட்டி விவசாயம் செய்வாராம். மேலும், பயிர்களை அறுவடை செய்து சந்தையில் விற்பனை செய்வதுவரை விவசாயம் சம்பந்தப்பட்ட எல்லா வேலையும் அவருக்கு அத்துப்படியாம்.

அம்மணி வேறலெவல்தான்!..

இதையும் படிங்க: அடுத்தடுத்து 2 டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு!.. அந்த நடிகைக்கு கிடைக்க காரணமே அந்த மேட்டர் தானாம்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top