தகிட ததுமி தகிட ததுமி தந்தானா!. ‘சலங்கை ஒலி’ பாணியில் தயாராகப் போகும் படம் - நடிக்கிறது யார் தெரியுமா?

by Rohini |   ( Updated:2024-02-21 06:35:43  )
jayam
X

jayam

Salangai oli movie: கமல்ஹாசன் நடிப்பில் சகர சங்கமம் என்ற பெயரில் தெலுங்கில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த படத்தை தமிழில் சலங்கை ஒலி என்ற பெயரில் டப் செய்து எடுத்தார்கள். அந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஜெயப்பிரதா நடிக்க கூட சரத்பாபுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தமிழ் , தெலுங்கு மட்டுமில்லாமல் மலையாளத்திலும் படம் வெளியானது. மூன்று மொழிகளிலும் கமல்ஹாசனே வாய்ஸ் கொடுத்திருந்தார். படம் எல்லா மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி ஏகப்பட்ட விருதுகளை அள்ளிச்சென்றது. முழுவதும் பரத நாட்டியத்தின் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் கமல் ஒரு பரத நாட்டிய கலைஞராகவே நடித்திருப்பார்.

இதையும் படிங்க: மகன் மனைவியுடன் ஸ்கூட்டரில் டிரிபிள்ஸ் போன எஸ்.ஏ.சி!.. உடனே கார் வாங்கி கொடுத்த நடிகர்…

அடிப்படையில் கமல் ஒரு டான்சர் என்பதால் அவர் நடனத்திற்காகவே மக்கள் இந்தப் படத்தை பார்க்க ஆர்வம் காட்டினார்கள். 1983 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பை பெற்ற படமாக காணப்படுகிறது. இந்த நிலையில் சலங்கை ஒலி பட பாணியில் இயக்குனர் மோகன் ராஜா ஒரு படத்தை எடுக்க இருக்கிறாராம்.

அந்தப் படத்தில் ஜெயம் ரவியை நடிக்க வைக்க இருப்பதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில்தான் மோகன் ராஜா தற்போது ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து தனிஒருவன் 2 படத்தை எடுக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில் அந்தப் படம் முடிந்த பிறகே மோகன் ராஜா ஜெயம் ரவியை வைத்து சலங்கை ஒலி பாணியில் அந்த படத்தை எடுக்க போகிறார் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: லால் சலாம் படத்தில் இத்தனை பஞ்சாயத்தா? அப்புறம் எப்படி சலாம் போட? ஐஸ்வர்யா மீது புகார் கொடுத்த நடிகர்

கமல் மாதிரியே ஜெயம் ரவியும் பரத நாட்டியம் முறைப்படி கற்ற ஒரு கலைஞர். அதனால் இந்தப் படம் ஓரளவு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story