வடிவேலு செஞ்ச காரியத்துக்கு அரிவாளை தூக்கி வெட்டப் போன நடிகர்! இந்தளவுக்கு நடந்திருக்கா?

Published on: March 9, 2024
vadi
---Advertisement---

Actor Vadivelu: தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில் இவர்களுக்குப் பிறகு நகைச்சுவையில் கோலோச்சி வந்தவர் நடிகர் வடிவேலு. வைகைப்புயல் என்று அனைவராலும் அழைக்கப்படும் வடிவேலு கவுண்டமணி செந்தில் பீக்கில் இருக்கும்போதே இந்த சினிமாவிற்குள் நுழைந்தவர். அந்த நேரத்தில் வடிவேலுவை பார்த்து கவுண்டமணி ஏதோ சொன்னதாகவும் பல செய்திகள் வெளியானது.

ஆரம்பத்தில் பல சோதனைகளை கடந்து வந்த வடிவேலு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து தனக்கென ஒரு மார்கெட்டை தக்கவைத்துக் கொண்டார். இன்று காமெடியில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருக்கிறார் வடிவேலு. எப்படி கவுண்டமணி செந்தில் இல்லாத படங்களை பார்க்க முடியாதோ அதேபோல் 10 வருடங்களுக்கு முன்பு வரை வடிவேலு இல்லாத படங்களை பார்க்க முடியாது.

இதையும் படிங்க: குடிச்சு கூத்தடிக்கிறது ஒரு படமா? மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்

அனைத்து முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் எல்லாம் வடிவேலுவின் காமெடி தான் இடம்பெற்று இருக்கும். சமீப காலமாக வடிவேலுவை பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவருடன் நடித்த துணை நடிகர்களே வடிவேலுவை பற்றி கண்டபடி பேசி வருகிறார்கள்.

யாருக்கும் எதையும் செய்ய நினைக்காதவர் வடிவேலு. இதுவரை எந்த ஒரு உதவிகளையும் செய்யவில்லை. கூட நடித்து துணை நடிகர்களாலேயே இந்த அளவு புகழை பெற்று இருக்கும் வடிவேலு அந்த நடிகர்களையே நிற்கதியில் விட்டுவிட்டார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதையும் படிங்க: மஞ்சும்மெல் பாய்ஸ் இயக்குனர் மீது Metoo புகாரளித்த நடிகை.. பிரபலம் ஆகிட்டாலே பிரச்னை தானா?…

ஆனால் பிரபல காமெடி நடிகர் ஜெயமணி வடிவேலு பற்றி சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இவர் பார்ப்பதற்கு ஒரு சாயலில் செந்திலை போன்ற தோற்றம் கொண்டவர். ஆனால் வடிவேலு கூட ஒரு படத்தில் கூட நடிக்கவில்லையாம். ஆனால் வடிவேலுவுடன் நடிக்க வாய்ப்பு வரும்போது எல்லாம் வடிவேலுவின் துணை நடிகர்களாலேயே அந்த வாய்ப்புகள் எல்லாம் பறிபோனது என ஜெயமணி கூறினார்.

வடிவேலு நடித்த ஒரு படத்தில் நடிப்பதற்காக ஜெயமணி காரில் வந்து இறங்கினாராம். உடனே வடிவேலு உடன் இருந்த மற்ற நடிகர்கள் ஜெயமணியை பற்றி இல்லாததை எல்லாம் சொல்லி வடிவேலுவை கடுப்பேற்றி இருக்கிறார்கள். உடனே வடிவேலு 5 லட்சம் நடிகர் காரில் வந்து இறங்குகிறார் என ஜெயமணியை கிண்டல் அடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: குருநாதர் பாக்கியராஜ் மாதிரி படங்களை எடுக்கக்கூடாது!… இப்படியெல்லாம் யோசித்தாரா பார்த்திபன்!..

jaya
jaya

இதை அப்படியே நடிகர் பெஞ்சமின் ஜெயமணியிடம் போய் சொல்ல பதிலுக்கு ஜெயமணியும் வடிவேலுவை பற்றி ஏதோ சில வார்த்தைகளை கூறியிருக்கிறார். இதை பெஞ்சமின் மறுபடியும் வடிவேலுவிடம் சொல்லி இருக்கிறார். இப்படி உடன் இருந்தவர்களே வடிவேலுவுக்கும் ஜெயமணிக்கும் இடையே சிண்டு மூட்டி விட்டிருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சனை அப்படியே பெரிதாக இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு ஜெயமணி சில ஆட்களை வரவழைத்து வடிவேலுவை வெட்டவே போய்விட்டாராம். அதன் பிறகு விஜய்காந்த்தான் தலையிட்டு இவர்கள் பிரச்சினையை முடித்து வைத்திருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.