என்னப் பத்தி சொன்னா உங்களை பத்தி எல்லாத்தையும் சொல்லிருவேன்! ரஜினியை மிரட்டிய வில்லன் நடிகர்

rajini
Actor Rajini: எங்கு இருந்தோ வந்து தமிழ் நாட்டின் சூப்பர்ஸ்டாராக கிட்டத்தட்ட 50வருடங்களை நிறைவு செய்யப் போகும் உன்னதமான நடிகர் ரஜினிகாந்த். 1975 ஆம் ஆண்டு தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த ரஜினி இன்றுவரை அதே நிலைப்பாட்டுடன்தான் இருந்து வருகிறார்.
நடிப்பையும் தாண்டி ஆன்மிகத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் ரஜினி. அடிக்கடி இமயமலை செல்வது, ஆன்மீக விழாக்களில் கலந்து கொள்வது என தன்னை எப்போதும் ஒரு ஆன்மீகவாதியாகவே காட்டி வருகிறார்.
இதையும் படிங்க: விஸ்வாசம் படத்துல டைம் டிராவல் காட்சி இருக்கு தெரியுமா?… ஆனா சிவா சார் இது ஓவரா இல்ல!
அவர் சாதாரணமாக உட்காரும் போது கூட கையில் முத்திரை போஸில் தான் உட்கார்ந்திருப்பாராம். இந்த நிலையில் பிரபல வில்லன் நடிகரான ஜெகபதிபாபு ரஜினியை பற்றி ஒரு சுவாரஸ்ய தகவலை கூறினார். ரஜினியுடன் குசேலன், லிங்கா மற்றும் அண்ணாத்த போன்ற படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஜெகபதிபாபு .
குசேலன் படத்தில் பார்பர் கதாபாத்திரத்திற்கு ஜெகபதிபாபுவை கமிட் செய்ததும் ரஜினி வேண்டாம் என்று சொன்னாராம். ஏனெனில் ஜெகபதிபாபு மிகவும் ஸ்டைலாக அதுவும் ஸ்டைலிஸ்ட் வில்லன் என்ற பெயரை வாங்கியவர். இதன் காரணமாகவே அப்படி சொன்னதாக ஜெகபதிபாபு கூறினார்.
இதையும் படிங்க: என் அப்பா, அண்ணன் இறந்தப்போ கூட எனக்கு இப்படி ஆகல!.. விஜயகாந்துக்காக உருகும் எஸ்.ஏ.சி.
அண்ணாத்த படத்தின் சமயத்தில் கீர்த்தியுடன் ஜெகபதிபாபு பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது கீர்த்தியிடம் ரஜினி ‘இவன்கிட்ட ஜாக்கிரதையாக இரு. எல்லார்கிட்டயும் இவன் மேல ஒரு கெட்டப் பெயர் இருக்கிறது’ என்று சொன்னாராம். இதை கீர்த்தி அப்படியே ஜெகபதிபாபுவிடம் சொல்ல,
அவர் ரஜினிடம் ‘சார் என்ன பத்தி சொன்னீங்கனா உங்கள பத்தி எனக்கு நல்லாவெ தெரியும். நானும் சொல்லிருவேன்’ என்று சொல்லியிருக்கிறார். உடனே ரஜினி ஐயோ வேணாம் என்று சொன்னதாக ஒரு பேட்டியில் ஜெகபதிபாபு கூறினார்.
இதையும் படிங்க: என்னங்க கோபி மறுபடியும் பழைய பொண்டாட்டிய பார்த்து ஃபீல் பண்ணுறீங்க!.. தர்ம அடி விழப்போது!..