Cinema News
அவரால அந்த படத்துல என்னால நடிக்கவே முடியல!.. காளிவெங்கட் செல்றத கேளுங்க!..
ஒரு நடிகர் மற்றொரு நடிகரின் நகைச்சுவையை ஒரு ரசிகனைப் போலப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாராம். அதனால் அந்தக் காட்சியில் அவரால் நடிக்கவே முடியவில்லையாம். அது வேறு யாருமல்ல. வேகமாக வளர்ந்து வரும் காமெடி நடிகர் காளிவெங்கட். இவர் தனது கலகல அனுபவங்களை சித்ரா லெட்சுமணனிடம் ஒரு பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முனிஷ்காந்த் கூட நடிக்கும்போது சூட்டிங் போற மாதிரியே தெரியாது. அவரு கூட நடிக்கும்போது சிரிக்காம இருக்குறதே பெரிய போராட்டம். படத்துல அந்தப் போஸ்டரைத் தூக்கி வெளியே எறிஞ்சிடுவாரு. அப்போ இவரு இருங்கடா ஒரு ஸ்டாருக்கே சோறு இல்லைன்னு சொல்றீங்களான்னு குனிஞ்சி எடுப்பாரு. அப்போ அந்த 80ஸ் பேண்ட் எல்லாம் டைட்டா இருக்கும்.
குனிஞ்சி எடுப்பாரு. அந்த பேண்ட் வெடிச்சி டர்ருன்னு கிழிஞ்சிடும். உள்ளே பட்டாபட்டி போட்டுருந்தாரு. என்னால சிரிப்பை அடக்க முடியல. அப்போ பேண்ட்ட தைச்சி எடுத்துட்டு வர லேட்டாகும். நைட் ஒண்ணே முக்காலா ஆயிடுச்சி. என்னால சிரிக்காம இருக்க முடியல. லாஸ்ட் ஷாட். 13 டேக் ஆயிடுச்சி. அது வரை நான் சிரிச்சிக்கிட்டே இருக்கேன். அப்போ என் ப்ரண்ட் கேமரா மேனுக்கு அசிஸ்டண்ட்டா இருந்தாரு. ஐயா உங்களால தான் சூட்டிங் லேட்டாகுது. எல்லாருமே வெயிட் பண்ணிக்கிட்டே இருக்காங்க. நீங்க சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க. கொஞ்சம் சின்சியரா இருங்கன்னுட்டாரு.
எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. ரொம்ப ஃபீல் ஆயிடுச்சு நான் சின்சியரா இல்லாத மாதிரி. அப்புறம் ரொம்பக் கட்டுப்படுத்தி சிரிப்பை அடக்கிக்கிட்டு நடிச்சேன். அதுக்கு அப்புறம் சூட்டிங் முடிஞ்சதும் சிரிச்சிட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க… வேணாம்பா!. அஜித் ஃபேன்ஸ் ரொம்ப கலாய்ப்பாங்க!.. விஜய் நடிக்க தயங்கிய அந்த வேடம்!..
2011ல் ராம் குமார் இயக்கத்தில் வெளியான படம் முண்டாசுப்பட்டி. இந்தப் படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடித்துள்ளார். முனிஷ்காந்த், காளிவெங்கட் இருவரும் காமெடியில் பட்டையைக் கிளப்பிய படம். 80ஸ் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அதே போல 2022ல் வெளியான கட்டா குஸ்தி படத்தில் இருவரது காமெடியும் ரொம்பவே ரசிக்க வைக்கும்.