Connect with us

Cinema News

கடவுள் குறித்து கமல் என்ன தான் சொல்ல வருகிறார்? புரியாதவர்கள் இதை முதல்ல படிங்க..!

கமல் நாத்திகர் என்பது நாம் அறிந்ததே. ஆனால் அவர் படங்களில் கடவுள் சம்பந்தமான காட்சிகளோ அருமையாக உள்ளன.

பொதுவாக உலக நாயகன் கமல் பகுத்தறிவு, நாத்திகம், கம்யூனிசம், திராவிடம் என எல்லாவற்றையும் பற்றி அதிரடியாகப் பேசி பட்டையைக் கிளப்புவார். இவர் பேட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்…! தான்.

இவரது சில படங்களில் கடவுள் சம்பந்தப்பட்ட காட்சிகள் நம்மைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும். அதைப் பற்றிப் பார்ப்போம்.

தசாவதாரம் படத்தில் பல மதங்களைப் பற்றி சொல்லியிருப்பார். இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் அதில் சைவத்தையும், வைணவத்தையும் காட்டி அவற்றிற்கு இடையே நடக்கும் ஒரு பெரும் வாத யுத்தத்தைக் காட்சிப்படுத்தியிருப்பார்.

அதே போல் கிறிஸ்தவம், இஸ்லாம், பௌத்தம், சீக்கிஸம் ஆகிய மதங்களும் படத்தின் காட்டப்பட்டு இருக்கும். அதிலும் கல்லை மட்டும் கண்டால் பாடல் அவ்வளவு அர்த்தம் பொதிந்தது.

முகுந்தா முகுந்தா பாடல் பெருமாளுக்கு உகந்த பாடல். இன்றும் பல கோவில் விழாக்களில் இந்தப் பாடல் தவறாமல் இடம்பிடிப்பதுண்டு.

மகாநதி படத்தில் வரும் ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யவே என்ற பாடல் அருமையான பாடல். இதைப் பாடியவர் மகாநதி ஷோபனா. அருமையான பக்தி மெலடி.

குணா படத்தில் பார்த்தால் இவர் மனதுக்குள் நினைத்த அபிராமி என்ற தேவதை நேரில் தோன்றி பிரசாதமாக லட்டு கொடுப்பது. அதை இவர் வாங்கும் நேரம் வரும் பாடல் தான் இது. பார்த்த விழி பார்த்த படி காத்துக் கிடக்கு…சூப்பரான மெலடி பாடல். நம்மை தாலாட்டி தூங்க வைத்து விடும் ரகம்.

Virumandi

அதே போல விருமான்டி படத்தில் விரு விரு மாண்டி விருமாண்டி…என்ற பாடல் நமக்குள் விறுவிறுப்பை உண்டாக்கி விடும். அந்தக் காண்டாமணி ஓசை கேட்கையில என்ற பாடலில் இசைஞானி இளையராஜா மிரட்டியிருப்பார்.

கமலைப் பொறுத்தவரை அவர் எப்போதும் தன்னை ஒரு நாத்திகர் என்று சொல்லிக் கொள்வதில்லை. பகுத்தறிவாளி என்றே சொல்வார்.

நாத்திகத்துக்கும், பகுத்தறிவாளிக்கும் நிறையவா வேறுபாடுகள் என்று கேட்கலாம். ஆம். எந்த ஒரு விஷயத்தால் நமக்கு நல்லது நடக்குமோ அதை ஆதரித்தால் அதுதான் பகுத்தறிவு.

கடவுள் இல்லை என்று சொல்பவர் பகுத்தறிவாளி. ஒரு பாட்டி தன் நெற்றியில் வைக்கும் விபூதியை அழிப்பதில்லை. கடவுளை விட பாட்டியின் பாசமே பெரிசு…. என்று சொல்பவர் ஒரு ரகம். அதுதான் கமல்.

நாத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் அன்பே சிவமாகும்…! கடவுள் குறித்து கமல் என்ன சொல்ல வருகிறார்…?

கமல் எப்போதும் அன்பை போதிக்கும் மனிதன் தான் கடவுள் என்பார். அதைத் தான் அன்பே சிவம் படத்திலும் அடிக்கடி சொல்வார். நமக்கு யார் யார் நல்லது செய்றாங்களோ அவங்க எல்லாருமே கடவுள் என்பார்.

Anbe sivam

அன்பே சிவம் படத்தில் அவரையே கடவுளாக சித்தரிக்கும் விதத்தில் பல காட்சிகள் அமைந்திருக்கும்.

உதாரணமாக இந்த மாதிரி சமயத்தில் தான் கடவுள் இருக்காரா? இல்லையான்னு சந்தேகம் வருது என்று மாதவன் சொல்ல, கமலைப் பார்த்ததும் கடவுள் இருக்கார் என ஒப்புக் கொள்வார்.

அதே போல படத்தின் ஆரம்பக் காட்சியில் தேங் காட் என மாதவன் சொல்லும் போது கமல் யு ஆர் வெல்கம் என்பார்.

அதே மாதிரி விபத்தில் இருந்து தப்பிச்சவங்க கடவுளுக்கு சமம் என்ற வசனம். நாசருடன் பேசும் பல வசனங்களைப் பார்க்கும் போது கமல் தன்னைக் கடவுளாக நம் முன் காட்ட முனைவது தெரியும்.

தசாவதாரம் படத்திலும் கோவிந்தா என்னை மன்னிச்சிடுப்பா என அசின் சொல்வார். அப்போது கமல் மன்னிச்சிட்டுடன் என்பார். இந்த வசனம் அவர் பெயர் கோவிந்த் என்றதால் தானோ என்று எண்ணத் தோன்றும்.

Pammal K Sambantham 2

ஆனால் அது அப்படி மட்டுமல்ல. கடவுள் நான் தான் என அவரே சொல்கிறார். கோவிந்தா நன்றிப்பா என அசின் சொல்லும் போதும், யு ஆர் வெல்கம் என்பார் கமல். ஒரு கட்டத்தில் கடவுள் உண்டுன்றேளா… இல்லைன் றேளான்னு அசின் கேட்க…நான் இல்லேன்னு எங்க சொன்னேன். இருந்தா நல்லாருக்குமேனு தான் சொல்றேன் என்பார் கமல்.

இன்னோரு படம் பம்மல் கே.சம்பந்தம். சாதாரண காமெடி காட்சி. இதுல கூட கமல் தன்னைக் கடவுளாகக் காட்டியிருப்பார். இந்தக் காட்சியில் சிவபெருமான் வேடமிட்ட கமலைப் பார்த்து நீதிபதி கும்பிட, பதிலுக்கு இவர் வணக்கம் சொல்வார்.

Vasool Raja MBBS

வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் ஒரு சீன் வரும். அதுல கமல் இப்படி சொல்வார். கடவுள் இருக்குன்னு சொல்றான் பார். அவன நம்பலாம். கடவுள் இல்லன்னு சொல்றான் பாரு அவன கூட நம்பலாம்.

ஆனா நான் தான் கடவுள்னு சொல்றான் பாரு. அவன மட்டும் நம்பிடாத…நம்புன பூட்ட கேஸ் ஆயிடுவ. இந்த டயலாக் யாருக்குன்னு நாம பார்த்தா அது போலிச்சாமியார்களுக்கு என்று கண்கூடாகவே தெரியவரும்.

google news
Continue Reading

More in Cinema News

To Top